நடிகன்யா!.. விஜய் சேதுபதி மீண்டும் எடுத்த முடிவு.. ஆடிப்போன கோலிவுட்.. நீங்க கலக்குங்க பாஸ்!

விஜய் நடித்து வரும் தளபதி 64 படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி முடிவு செய்துள்ளார்.

Recommended Video

Thalapathy64 Update:தளபதி 64 வில்லன் முடிவாயிச்சு

சென்னை: விஜய் நடித்து வரும் தளபதி 64 படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி முடிவு செய்துள்ளார் என்று தகவல்கள் வருகிறது. அவரின் இந்த முடிவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படம் வேகமாக தயாராகி வருகிறது. விஜய் நடிக்கும் காட்சிகள் இந்த வருட இறுதியிலேயே முடிந்துவிடுமாம்.

அடுத்த வருடம் மே மாதத்திற்கு இந்த படம் குறி வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் வில்லன் காட்சிகளை தனியாக எடுக்க இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

என்ன திட்டம்

என்ன திட்டம்

தளபதி 64 படத்தின் வில்லன் யார் என்று பல நாட்களாக முடிவாகாமல் இருந்தது. இதற்காக இரண்டு பேரிடம் லோகேஷ் கனகராஜ் பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் இந்த படத்தில் முன்னணி நடிகர்கள் யாரையாவது வில்லனாக போட லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருந்தார்.

டிசம்பர் மாதம்

டிசம்பர் மாதம்

விஜயும், வில்லன் பாத்திரமும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளை டிசம்பர் மாதம் எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதன்பின் விஜய் தனது 65வது படத்தில் நடிக்க சென்றுவிடுவார் என்று கூறப்படுகிறது. இதனால் படக்குழு பிரி புரொடக்சன் பணிகளை வேகமாக முடித்து வருகிறது.

எப்படி

எப்படி

நடிகர் விஜய்க்கு கேரளாவில் பெரிய அளவில் ரசிகர் படை இருக்கிறது. இதனால் கேரளாவில் தற்போது முன்னணி ஹீரோவாக டோவினோ தாமஸ் இதனால் வில்லனாக வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது.

என்ன பேச்சு

என்ன பேச்சு

நடிகர் விஜய் சேதுபதி உடன் லோகேஷ் கனகராஜ் டீம் இதற்காக பேசி வருகிறது. ஆம் தளபதி 64 படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க 99% ஒப்புக்கொண்டார் என்கிறார்கள். இன்னும் அவர் தேதிகளை மட்டும் கூறவில்லை. லோகேஷ் கனகராஜ் விஜய் சேதுபதி இருவரும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதே சமயம் விஜய் சேதுபதியை இதனால் கோலிவுட்டில் பலரும் பாராட்டி வருகிறார்கள். விஜய் சேதுபதி மிகவும் வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடிக்கிறார். ஹீரோ என்ற திமிர் இல்லாமல் இருக்கிறார் என்கிறார்கள்.

திமிர் இல்லை

திமிர் இல்லை

ஆரஞ்ச் மிட்டாய் படத்தில் கிழவனாக நடித்தார். பேட்ட படத்தில் வில்லனாக நடித்தார். முக்கியமாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்தார். அவரின் ஷில்பா பாத்திரம் பெரிதாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் வில்லனாக நடிக்க உள்ளார்.

என்ன நடிப்பு

என்ன நடிப்பு

ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் வித்தியாசம் காட்டி வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவி உடன் நடிக்கிறார். மேலும் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். இதெல்லாம் போக அமீர் கான் உடன் இந்தியில் வேறு நடிக்கிறார்.

உழைப்பு

உழைப்பு

ஒரு மனிதரால் எப்படி இவ்வளவு விஷயங்களை செய்ய முடிகிறது என்று பலரும் இவரை வியந்து புகழ்ந்து வருகிறார்கள். ஓய்வு இல்லாமல் அவர் உழைக்கிறார். சினிமாவிற்காக முழு அர்ப்பணிப்போடு அவர் செயல்பட்டுகிறார் என்று பலரும் புகழ்ந்து வருகிறார்கள்.

விஜய் சேதுபதி எப்படி

விஜய் சேதுபதி எப்படி

அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி விஜய் இருவரும் ஒரே படத்தில் நடித்தால் வேற லெவலில் இருக்கும். இன்னொரு பேட்ட படம் போல கலர்ஃபுல்லாக இருக்கும். விஜய் சேதுபதியின் கெட்டப் இதில் எப்படி இருக்கும் என்று இப்போதே பலருக்கும் பிபி எகிற தொடங்கி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X