Don't Miss!
- News
டெல்டாவில் பயிர் சேதம்! ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு தருக! அரசுக்கு தமிமுன் அன்சாரி வேண்டுகோள்!
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Sports
இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா
- Lifestyle
உங்க காலில் இந்த பிரச்சினை இருந்தால் உங்கள் தைராய்டு சுரப்பியில் சிக்கல் இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விஜய் சேதுபதி - எல். ராமசந்திரன் இணையின் ஹாட்ரிக் போட்டோ ஷூட் - “தி ஆர்டிஸ்ட்”
"ஹூயூமன்", "கலைஞன்" ஆகிய தலைப்புகளில் விஜய் சேதுபதியை தனித்துவமாகக் காட்சிப்படுத்திய எல். ராமசந்திரன் இந்த ஆண்டும், தொடர்ந்து மூன்றாவது முறையாக அவரோடு இணைந்து, "தி ஆர்டிஸ்ட்" என்ற தலைப்பில் காட்சிகளை வடிவமைத்து, அதனை 2023-ம் ஆண்டுக்கான மாதாந்திர நாட்காட்டியாய் வடிவமைத்திருக்கிறார்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன், ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து, தனது வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் பிரமிக்கத்தக்க ஒரு புகைப்பட தொகுப்பை உருவாக்கி, அதனை மாதாந்திர நாட்காட்டியாக வடிவமைத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டவர்.
ஓவியர், சிற்பி, கிராபிக் ஆர்டிஸ்ட் என பல பரிமாணங்களில் மக்கள் விஜய் சேதுபதியை புகைப்படம் எடுத்து, அதனை வண்ணமயமான நாட்காட்டியாக உருமாற்றியுள்ளார் எல்.ராமசந்திரன்.

இந்த படைப்பிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் சுமார் பத்து நாட்களுக்கும் மேலாக 12 கண்கவர் செட்டுகளை, ஒவ்வொன்றையும் தனித்துவமான தலைப்பில் (Theme) வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"கலையும் கற்பனையும், பல சமூக மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது; பல முன்னெடுப்புகளுக்கு ஆதாரமாய் இருந்துள்ளது; பலரையும் மகிழ்வித்து வருகிறது; அவ்வாறான எல்லா கலைஞர்களுக்கும் இந்த "ஆர்டிஸ்ட்" சமர்ப்பணம்" என குறிப்பிடுகிறார் எல் ராமசந்திரன்.
கடந்த 2021ம் ஆண்டு கோவிட் ஊரடங்கு சமயத்தில் "HUMAN", 2022ம் ஆண்டு "கலைஞன்" என்று தெருக்கூத்து கலைஞர்களை மையமாகக் கொண்டு வெளியிடப்பட்ட நாட்காட்டி ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இம்முறை "தி ஆர்டிஸ்ட்" நாட்காட்டி விற்பனைக்கு வருகிறது. இதன் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய், காசா அறக்கட்டளை மூலம் கல்வி மற்றும் மருத்துவ நலன்களுக்காக பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.