கிண்டலோடு துக்ளக் தர்பாரை ஆரம்பித்து வைத்த விஜய் சேதுபதி.. சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?

தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படமான துக்ளக் தர்பார் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படமான துக்ளக் தர்பார் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிஸியான ஹீரோ என்றால் அது விஜய் சேதுபதி தான். அவர் நடிப்பில் ஒரு ஆண்டுக்கு ஐந்து அல்லது ஆறு படங்கள் ரிலீசாகின்றன. தமிழில் கைநிறைய படங்கள் வைத்திருக்கும் அவர், தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.

Vijay Sethupathy makes fun on Thuglag darbar techincal crew

இந்நிலையில் தீனதயாளன் இயக்கும் 'துக்ளக் தர்பார்' எனும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். சீதக்காதி இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுத, 96 பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

Vijay Sethupathy makes fun on Thuglag darbar techincal crew

துக்ளக் தர்பார் படத்தின் படப்பிடிப்பு சம்பிரதாய முறைப்படி பூஜையுடன் இன்று தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசும் போது, மைக் சரியாக ஒலிக்கவில்லை. பலமுறை முயற்சித்தும் மைக் சரியாகவில்லை.

பின்னர் வேறொரு மைக் கொண்டு வந்து தரப்பட்டது. அதில் பேசிய அவர், "படப்பிடிப்புக்கு இது போல் ஒரு மைக் கொண்டு வாங்க. ஷூட்டிங் விளங்கிடும்", என கிண்டல் செய்தார். இதைக்கேட்டு அரங்கில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

Vijay Sethupathy makes fun on Thuglag darbar techincal crew

இந்தப் பூஜையில், அதிதிராவ் ஹெய்தாரி, பார்த்திபன், காயத்ரி, சமுத்திரக்கனி, பகவதி பெருமாள், கருணாகரன், ராஜ்குமார், தயாரிப்பாளர்கள் வயகாம் அனுப் விஜய்சேதுபதி புரொடக்சன் ராஜேஷ், சினிமாவாலா சதிஷ் மற்றும் இயக்குநர்கள் பிரேம்குமார், பாலாஜி தரணிதரன், தியாகராஜ குமாரராஜா, அஜய் ஞானமுத்து, பிரபாகரன், மருதுபாண்டி, ஆண்ட்ரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக ஆந்திர மாநிலம் சித்தூர் கலெக்டர் என்.பாரத்குப்தா கலந்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X