விஜய்சேதுபதி மற்றும் இயக்குனர் மிஷ்கின் இணைந்து வெளியிட்ட டீமன் ஃபர்ஸ்ட் லுக்
நடிகர் விஜய்சேதுபதி மற்றும் இயக்குனர் மிஷ்கின் இணைந்து, தேசிய விருது பெற்ற இயக்குனர் வசந்தபாலன் வழங்கும் டீமன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
அங்காடித்தெரு, அரவான், காவிய தலைவன், ஜெயில், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரமேஷ் பழனிவேல், 'டீமன்' படத்தின் மூலம் இயக்குநராகத் அறிமுகமாகிறார். மோகன்லாலின் தேசிய விருது பெற்ற "மரைக்காயர்" திரைப்படத்தில் தனது இசைக்காக பாராட்டுகளைப் பெற்ற ரோனி ரஃபேல், இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

ஹாரர்-சஸ்பென்ஸ்-த்ரில்லர் வகையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களான பீட்சா, ராட்சசன், பிசாசு போன்ற திரைப்படங்கள் போன்ற படங்களின் கூறுகளையும் ஒன்றிணைத்து உணர்ச்சிகரமான உள்ளடக்கத்துடன் இணைக்கப்பட்டு, ஈர்க்கும் தொகுப்புடன் 'டீமன்' வடிவமைக்கப்பட்டுள்ளது.
'ஆரம்பம்' படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் சச்சின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வசந்த பாலன் இயக்கிய ஜி.வி.பிரகாஷ் குமாரின் 'ஜெயில்' படத்தில் நடித்த அபர்ணதி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் கும்கி அஸ்வின், இன்ஸ்டாகிராம் சென்சேஷன் ரவீனா தாஹா, பிக் பாஸ் புகழ் ஸ்ருதி பெரியசாமி, மிப்புசாமி, பிரபாகரன், அபிஷேக், தரணி, நவ்யா சுஜி, சலீமா மற்றும் பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











