»   »  அள்ளிக் கொடுத்தும் வாங்க மறுக்கும் விஜய் சேதுபதி!

அள்ளிக் கொடுத்தும் வாங்க மறுக்கும் விஜய் சேதுபதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

"ரூ 10 கோடி சம்பளம். அட்வான்ஸ் சிங்கிள் பேமெண்ட்ல 5 கோடி. உடனே தர்றோம்," இப்படி ஒரு ஆஃபர் வந்து அதனை தட்டிக் கழித்திருக்கிறார் விஜய்சேதுபதி.

தமிழ் சினிமாவில் இப்போதைக்கு மினிமம் கேரண்டி ஹீரோ விஜய் சேதுபதிதான். புதிதாக படமெடுக்க வரும் தயாரிப்பாளர்கள் விஜய் சேதுபதியைத் தான் மொய்க்கிறார்கள். அவர் ஓகே சொன்னால் அந்த கதை ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று நம்பிக்கை. அப்படி வருபவர்கள் அனைவரையுமே ஓகே செய்வதில்லை வி.சே. கதை பார்த்துதான் ஓகே சொல்கிறார்.

Vijay Sethupathy prefers script first

அப்படி சமீபத்தில் 10 கோடி சம்பளம் தர வந்த ஒரு கம்பெனியை மறுத்திருக்கிறார். முதலில் கதை, இயக்குநர் அப்புறம் தான் சம்பளம் என்பது விஜய்சேதுபதி ஸ்டைல்.

சரி, விஜய்சேதுபதி சம்பளம்?

ரூ 5 கோடி வாங்கிக்கொண்டிருந்தவர் விக்ரம் வேதா ஹிட்டுக்கு பின்னர் ரூ 7 கோடிக்கு வந்திருக்கிறாராம். கதை எக்ஸ்ட்ரா ஆர்டினரியாக இருந்தால் 5 போதும் என்று சொல்லிவிடுகிறாராம். ஆனால் அவர் மார்க்கெட் நிலவரத்துக்கு 15 வரை கேட்கலாம் என உசுப்பேற்றி விடுகிறார்கள்.

எதுக்கு இந்த அவசரம்? என்பது வி.சே கொள்கை.

English summary
Actor Vijay Sethupathi is avoiding producers who are offering big salary but giving preference to good scripts.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil