மனிதனின் மோசமான பக்கம்... விக்ரம் படத்தின் கேரக்டர் பத்தி விஜய் சேதுபதி வெளியிட்ட சீக்ரெட்!

சென்னை : நடிகர் விக்ரம் சேதுபதி தொடர்ந்து சிறப்பான கேரக்டர்களில் நடித்து வருகிறார். வித்தியாசம் மட்டுமே நடிப்பில் இவரது தாரக மந்திரமாக காணப்படுகிறது. இதை தவிர்த்து வயதான கேரக்டர், திருநங்கை, வில்லன் என்று எந்த கேரக்டர் வந்தாலும் அதை இருகை நீட்டி வரவேற்று நடிக்கிறார் மனிதர்.

நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த சிறப்பான கேரக்டர்கள் அவரை ரசிகர்களிடையே மக்கள் செல்வனாக மாற்றியுள்ளது. வயதான கேரக்டர்கள், திருநங்கை, வில்லன் கேரக்டர்கள் என இவர் சிறப்பான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதன்மூலம் ஏராளமான ரசிகர்களையும் பெற்றுள்ளார்.

தெலுங்கு, இந்தியிலும் படங்கள்

தெலுங்கு, இந்தியிலும் படங்கள்

தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். வெப் தொடர்களில் நடித்து வருகிறார். கத்ரினா கையிப்புடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் தி பேமிலி மேன் இயக்குநர்களுடன் இணைந்து வெப் தொடரில் நடித்து வருகிறார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் ராம்போவாக மிரட்டியிருந்தார். காதல் ஏன் இரண்டு பெண்கள்மீது வரக்கூடாது என்ற கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகியிருந்த நிலையில், இந்த கேரக்டருக்கு இவரைத் தவிர வேறு யாரும் நியாயம் செய்திருக்க முடியாது என்றே ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

உலகநாயகனுக்கு வில்லன்

உலகநாயகனுக்கு வில்லன்

அடுத்தடுத்து ரஜினி, விஜய் என மிரட்டலான வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி தற்போது கமலுக்கும் வில்லனாகியுள்ளார். விக்ரம் படத்தில் கமல் முன்னாள் காவல் அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது தன்னுடைய கேரக்டர் குறித்தும் விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

தனக்கு பிடித்த வில்லன் கேரக்டர்கள்

தனக்கு பிடித்த வில்லன் கேரக்டர்கள்

தான் வில்லன் கேரக்டர்களில் நடிக்க மிகவும் விரும்புவதாகவும் ஒரு மனிதனின் இருண்ட பக்கத்தை காட்டுவது தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்றும் கூறியுள்ளார். நிஜ வாழ்க்கையில் வாழ முடியாத ஒன்றை இதன்மூலம் வாழ்ந்துப் பார்க்கும் திருப்தி கிடைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனிதனின் மோசமான பக்கம்

மனிதனின் மோசமான பக்கம்

திரையில் எந்த வில்லன்களின் வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்காது என்றும் மாஸ்டர், உப்பென்னா போல விக்ரம் படத்தின் கேரக்டர் இருக்காது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். தொடர்ந்து இந்த படத்தின் ஒரு மனிதனின் மோசமான பக்கத்தை தெளிவாக காட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X