Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சென்னை டு பழனி... அங்கிருந்து செவ்வாய்கிரகத்துக்கு ஒரு டிரிப்.. விஜய் சேதுபதியின் புது ஐடியா!
சென்னை பழனி மார்ஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
சென்னை: தான் தயாரித்துள்ள சென்னை பழனி மார்ஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
விஜய் சேதுபதி தயாரித்த ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கியவர் பிஜு. இவர் அடுத்து இயக்கும் படம் சென்னை பழனி மார்ஸ். இந்த படத்தையும் விஜய் சேதுபதி தான் தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு வசனமும் விஜய் சேதுபதி தான்.
சென்னை பழனி மார்ஸ் படம் முழுக்க முழுக்க பயணத்தை மையப்படுத்திய காமெடி படமாக உருவாகி இருக்கிறது. எல்லா மனிதனுக்கும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த கனவை நோக்கிய பயணத்தைர டார்க் ஹூமர் பாணியில் படமாக்கியிருக்கிறார்கள்.
பாரி இளவழகன், வசந்த் மாரிமுத்து, பிரவீண் ராஜா, இம்தியாஸ் முகமது, ராஜேஷ் கிரி பிரசாத், வின் ஹாத்ரி ஆகியோர் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் மதன்குமார் தக்சிணா மூர்த்தி, ஏ.ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
என் பட்டு...மைசூர் பாக்கு... புது வெள்ளை மழை... மெல்ல மெல்ல என்னைத் தொட்டு!
இந்நிலையில், சென்னை பழனி மார்ஸ் படத்தின் பர்ஸ்ட் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி நேற்று வெளியிட்டார். அந்த போஸ்டரில் சிறுவர்கள் ரயில் விளையாட்டு விளையாடுவது போல், முக்கிய நடிகர்கள் சிலர் ஒரு விண்வெளி வீரருக்கு பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர். ஒவ்வொருவரும் ஒருவிதமான முகபாவனையில் இருக்கின்றனர்.
சென்னை பழனி மார்ஸ் படத்தின் பர்ஸ்ட் போஸ்டருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.