வீட்டிற்கே வந்த ராம்போ -கண்மணி -கதீஜா.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த மாதத்தில் ரிலீசானது காத்து வாக்குல ரெண்டு காதல் படம்.
படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த நிலையில் அவரது ரவுடி பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. திரையரங்குகளில் ரிலீசான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.
படம் வெளியாகி தற்போது 25 நாட்களை பூர்த்தி செய்துள்ளது. இதுமட்டுமில்லாமல் மேலும் ஒரு கொண்டாட்டத்திலும் படக்குழு ஈடுபட்டுள்ளது.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்
நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாகி சிறப்பான வரவேற்பை பெற்றது காத்து வாக்குல ரெண்டு காதல் படம். படத்தில் ராம்போ, கண்மணி மற்றம் கதீஜாவாக மூவரும் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தினர்.

வெற்றிகரமான 25 நாட்கள்
முக்கோண காதல் கதையை கொஞ்சம் வித்தியாசமாக கொடுத்திருந்தார் இயக்குநர். இந்த கான்செப்ட் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. திரையரங்குகளில் ரிப்பீட்டட் ரசிகர்களுடன் இந்தப் படம் சிறப்பான வெற்றியையும் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. இந்நிலையில் படம் தற்போது ரிலீசாகி 25 நாட்களை கடந்துள்ளது.

நான் பிழை பாடல் வெளியீடு
இதையொட்டி நேற்றைய தினம் படத்தின் சிறப்பான பாடலாக அமைந்துள்ள நான் பிழை என்ற பாடலின் வீடியோ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான எதிர்பார்ப்புடன் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

சிறப்பான பிரமோஷன்கள்
முன்னதாக படத்திற்காக சிறப்பான பல ப்ரமோஷன்களை படக்குழு செய்தது. தொடர்ந்து படம் ரிலீசையடுத்து விக்னேஷ் சிவன், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் இணைந்து படத்தை திரையரங்கில் சென்று பார்த்தனர். இந்தப் படத்தின் ரிலீசின்போது வெளியான விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமணம் குறித்த தகவலும் படத்திற்கு சிறப்பான பிரமோஷனாக அமைந்தது.

ஹிட்டடித்த பாடல்கள்
முன்னதாக அனிருத் இசையில் வெளியான இந்தப் படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில் பாடல்களே படத்திற்கான எதிர்பார்ப்பை மிகவும் அதிகமாக ஏற்படுத்தியிருந்தது. படத்தில் அதிரடி மற்றும் மெலடி என அனைத்தையும் சிறப்பாக கொடுத்திருந்தார் அனிருத்.

ஓடிடி ரிலீஸ்
இந்நிலையில் தற்போது 25 நாட்களிலேயே படம் ஓடிடியில் ரிலீசாகியுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தற்போது படம் ரிலீசாகியுள்ளது. இதையடுத்து இந்தப் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க முடியாத ரசிகர்கள் தற்போது வீட்டிலேயே பார்த்துக் கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











