மாமனிதன் கைப்பற்றிய 3 சர்வதேச விருதுகள்.. சிறந்த நடிகராக தேர்வான விஜய் சேதுபதி!
சென்னை : நடிகர் அருண் விஜய், காயத்ரி லீட் கதாபாத்திரங்களில் நடித்து சமீபத்தில் வெளியான படம் மாமனிதன்.
இந்தப் படத்தை இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியிருந்தார். இந்தப் படம் மூலம் சீனு ராமசாமி -விஜய் சேதுபதி 5வது முறையாக இணைந்திருந்தனர்.
இந்தப் படம் தற்போது சர்வதேச அளவில் பல விருதுகளையும் குவித்து வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தனக்கு பிடித்துவிட்டால் அது வில்லன் கேரக்டராக இருந்தாலும் அதில் நடிக்க கமிட்டாகி விடுகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார். இதையடுத்து சீனு ராமசாமி இயக்கத்தில் அவரது மாமனிதன் படம் வெளியானது.

யுவன் -இளையராஜா இசைக்கூட்டணி
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீசானது. இந்தப் படத்தில் முதல் முறையாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசைமைத்திருந்தனர். மேலும் யுவன் இந்தப் படத்தை தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

ரசிகர்களை கவர்ந்த மாமனிதன்
இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பான வெற்றியை பெற்றது. மேலும் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஆஹா ஓடிடியில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இதனிடையே சர்வசேத அளவில் இந்தப் படம் விருதுகளையும் குவித்து வருகிறது.

3 சர்வதேச விருதுகள்
சமீபத்தில் டோக்கியோவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த ஆசிய திரைப்படம் என்னும் கோல்டன் விருதை பெற்று பெருமை சேர்த்தது. இந்நிலையில் தற்போது தாகூர் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் 3 விருதுகளை அள்ளியுள்ளது மாமனிதன். சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்
இதேபோல சிறந்த சாதனை விருது மற்றும் விமர்சகர்கள் தேர்வு விருதையும் படம் பெற்றுள்ளது. இதுகுறித்து சீனு ராமசாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவிலும் மாமனிதன் படம் சிறப்பான விருதுகளை குவித்து வருவது விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











