புரியாத புதிர் ஆனது விஜய் சேதுபதியின் மெல்லிசை!
விஜய் சேதுபதியின் நடிப்பில் மெல்லிசை என்றொரு படம் ரொம்ப நாளாக கிடப்பிலிருந்தது நினைவிருக்கலாம்.
இந்தப் படத்தை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி. படத்தின் பெயர் ரொம்ப மென்மையாக இருப்பதாக நினைத்தார்களோ என்னமோ... இப்போது பெயர் மாற்றம் செய்துள்ளார்கள்.

புதிய தலைப்பு புரியாத புதிர்.
இந்தப் பெயரை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா? யெஸ்... கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய முதல் படம். ஐ நோ... என்ற ஒரு வார்த்தையை கிட்டத்தட்ட 10 நிமிடத்துக்குப் பேசி ரசிகர்களை மிரள வைத்த படம்.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 6 படங்களைத் தந்துள்ள விஜய் சேதுபதிக்கு, ஏழாவதாக கவண் என்ற படம் வெளியாகவிருக்கிறது. அதற்கு முன் இந்தப் படத்தை நவம்பரிலேயே வெளியிட்டுவிடலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி வந்தால், இந்த ஆண்டு 8 படங்கள் வெளியிட்டு ரெகார்ட் பிரேக் பண்ணுகிறார் விஜய் சேதுபதி!
Comments


Click it and Unblock the Notifications