விஜய் சேதுபதியின் அடுத்த படம்... 'ரம்மி' சேருமா?

By Shankar

மாறுபட்ட விமர்சனங்களைச் சந்தித்தாலும், வசூல் ரீதியாக விஜய் சேதுபதிக்கு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா வெற்றிப் படமே.

இப்போது அடுத்த ரிலீசுக்குத் தயாராகிறார்.

அடுத்த வரும் அவரது படம் ரம்மி. நாளை இந்தப் படத்துக்கு இசை வெளியீடு நடக்கிறது. (ரம்மி)

தொடர் வெற்றி..

தொடர் வெற்றி..

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தையும் சேர்த்தால் இரு ஆண்டுகளில் தொடர்ந்து 5 வெற்றிப் படங்களைத் தந்த ஹீரோ என்ற பெருமை விஜய் சேதுபதிக்கு உண்டு.

புது இயக்குநர்

புது இயக்குநர்

விஜய் சேதுபதியின் அடுத்த படமான ‘ரம்மி'யை இயக்குபவர் கே.பாலகிருஷ்ணன். டி.இமான் இசையமைக்கிறார். ஸ்ரீ வள்ளி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.

இரு நாயகிகள்

இரு நாயகிகள்

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து காயத்ரி, ஐஸ்வர்யா, சூரி, இனிகோ பிரபாகரன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகிய ‘ரம்மி' படத்தின் ஆடியோ வெளியீட்டை நாளை 25-ந் தேதி வெளியிடவுள்ளனர். சென்னையில் பிரசாத் லேப்பில் மாலை 6.30 மணிக்கு இந்த விழா நடைபெறுகிறது.

ஜே எஸ் கே

ஜே எஸ் கே

இந்த விழாவில், தமிழ் சினிமாவைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

இப்படத்தை விநியோகிக்கும் உரிமையை ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் வாங்கியுள்ளது. விஜய் சேதுபதி படங்களை தொடர்ந்து வாங்கி வெளியிட்டு வருகிறது ஜேஎஸ்கே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X