twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் சேதுபதியின் கருணை மனசு... அனிதா நினைவாக ரூ 50 லட்சம் கல்வி உதவி!

    By Shankar
    |

    Recommended Video

    விஜய் சேதுபதியின் கருணை மனசு..வீடியோ

    சென்னை: நீட் கொடுமைக்கு எதிராக தன் உயிரைக் கொடுத்துப் போராடிய அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்ட கல்வி வளர்ச்சிக்காக ரூ 50 லட்சம் கொடுத்து உதவியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

    இதுகுறித்து விஜய் சேதுபதி விடுத்துள்ள அறிக்கை:

    Vijay Sethupathy's noble gesture

    செய்தியாளர்களுக்கு வணக்கம்,

    நான் விளம்பரப் படங்களில் அதிகமாக நடிக்காமல் இருந்தேன். சில விளம்பரங்களை மட்டும் தோ்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.

    தற்போது ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளேன். இந்த விளம்பரம் மூலம் எனக்கு கிடைத்த சம்பளத் தொகையின் ஒரு பகுதியை கல்வி உதவித் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளேன். கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக அரியலூா் மாவட்டம் உள்ளது.

    இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 774 அங்கன்பாடிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.38 லட்சத்து 70 ஆயிரமும், தமிழ் நாட்டில் உள்ள 10 அரசு பார்வையற்றர் பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சமும் வழங்க உள்ளேன்.

    மேலும், 11 அரசு செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரமும் வழங்க உள்ளேன். அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிப் பெறும் ஹெலன் கெல்லர் என்ற செவித்திறன் குறைந்தோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் என மொத்தமாக ரூ.49 லட்சத்து 70 ஆயிரம் வழங்க உள்ளேன். இந்த தொகையை அரியலூா் மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உள்ளேன்.

    கல்வியில் பின்தங்கிய மாவட்டமான அரியலூரிலிருந்து அதிக மதிப்பெண் பெற்று டாக்டராக ஆசைப்பட்டு, அது முடியாமல் உயிர் நீத்த அனிதாவின் நினைவாக இந்த தொகையை வழங்குகிறேன்.

    English summary
    Actor Vijay Sethupathy has donated around Rs 50 lakhs to the educational development of Ariyalur district in the memory of student Anitha.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X