»   »  இந்த மாசமும் ஒரு விஜய் சேதுபதி படம்!

இந்த மாசமும் ஒரு விஜய் சேதுபதி படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த ஆண்டு முடியும்போது, விஜய் சேதுபதியின் கணக்கில் 9 படங்கள் வெளியாகி இருக்கும்.

ஆம்... ஏற்கெனவே இந்த ஆண்டு மட்டும் 6 விஜய் சேதுபதி படங்களை வெளியிட்டு விட்டார்கள். அடுத்து 7வதாக வெளியாகவிருக்கும் படம் புரியாத புதிர்.


மெல்லிசை என்று ஆரம்பிக்கப்பட்ட படம் இப்போது புரியாத புதிர் என்று புதிய பெயருடன் வெளிவர உள்ளது. விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள புரியாத புதிர் இந்த மாதம் 25-ம் தேதி வெளியாகிறது.


Vijay Sethupathy's Puriyatha Puthir to hit screens this month

இதற்கு முன்பு காதலும் கடந்து போகும், சேதுபதி, இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என விஜய் சேதுபதி நடித்த 6 படங்கள் வெளிவந்துள்ளன.


அடுத்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி - டி ராஜேந்தர் நடித்துள்ள கவண் என்கிற படம் டிசம்பரில் வெளியாகவிருக்கிறது. இது இந்த ஆண்டில் விஜய்சேதுபதின் 8வது படம்.


Vijay Sethupathy's Puriyatha Puthir to hit screens this month

நீண்ட நாட்களாக கிடப்பிலிருக்கும் இடம் பொருள் ஏவல் படமும் இந்த வருடம் வெளியாக வாய்ப்புள்ளது. அப்படி வெளியானால் ஒரே ஆண்டில் 9 படங்கள் தந்த ஒரே ஹீரோ என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும்.

English summary
Vijay Sethupathy's Puriyatha Puthir movie will be hits the screens this month

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil