விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன்... மிரட்டலாக வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு சங்கத்தமிழன் என பெயரிடப்பட்டுள்ளது.
சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.
விஜயா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்கிறார். விஜய் சந்தர் இப்படத்தை இயக்குகிறார்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர். பிரவீன் கே.எல். படத்தொகுப்பு பணியை கவனிக்கிறார்.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். நிவேதா பெத்துராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியிடப்பட்டது. அதன்படி இப்படத்திற்கு சங்கத்தமிழன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சங்கத்தமிழன் எனும் தலைப்புக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications