அஜித் படத்தால் விஜய் சேதுபதிக்கு வந்த சோதனை.. சங்கத்தமிழன் ரிலீஸ் பிரச்சினைக்கு 'இது' தான் காரணமா?

Recommended Video

Sunu Lakshmi Exclusive Interview

சென்னை: சங்கத்தமிழன் திரைப்படம் திட்டமிட்டப்படி ரிலீசாகாதது ஏன் என்பது தெரியவந்துள்ளது.

விஜய் சேதுபதி முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் சங்கத்தமிழன். நிவேதா பெத்துராஜ், ராஷிகண்ணா என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். வாலு, ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

சங்கத்தமிழன் படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ரவிந்தர் சந்திரசேகரின் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது.

சங்கத்தமிழனுக்கு சோதனை

சங்கத்தமிழனுக்கு சோதனை

சங்கத்தமிழன் திரைப்படம் முதலில் தீபாவளி பண்டிகையின் போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் ரிலீசானது, சங்கத்தமிழன் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

ரிலீசில் பிரச்சினை

ரிலீசில் பிரச்சினை

படம் இன்று (நவம்பர் 15ம் தேதி) ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு, விளம்பரம் எல்லாம் செய்யப்பட்டது. ஆனால் சொன்னபடி படம் இன்று ரிலீசாகவில்லை. இன்று மாலை அல்லது நாளை இத்திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் வீரம்

அஜித்தின் வீரம்

சங்கத்தமிழன் படத்தை தயாரித்துள்ள விஜயா புரொடக்ஷன்ஸ் தான் அஜித் நடித்த வீரம் படத்தையும் தயாரித்தது. அந்த படத்தின் விநியோகத்தின் போது ஏற்பட்ட பணப் பிரச்சினை தான் சங்கத்தமிழன் படத்தின் ரிலீசில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடரும் பேச்சுவார்த்தை

தொடரும் பேச்சுவார்த்தை

அதாவது வீரம் படத்தின் விநியோக உரிமை தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி விநியோகஸ்தர்களுக்கு தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பணபாக்கி வைத்திருப்பதால் படத்தை வெளியிட சிக்கல் எற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை சரி செய்ய தொடர்ந்து பேச்சுவார்தை நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X