Avengers Endgame: ரசிகர்கள் சொன்னது உண்மைதான் விஜய் சேதுபதி... உங்களுக்கு அது செட்டாகல!
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் அயர்ன்மேனுக்கு விஜய் சேதுபதியின் குரல் செட்டாகவில்லை.
சென்னை: அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் அயர்ன்மேனுக்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்தது தொடர்பாக ரசிகர்கள் சொன்னது உண்மையாகிவிட்டது.
உலகம் முழுவதும் இன்று பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியுள்ள படம் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம். அவெஞ்சர்ஸ் சீரிஸில் மார்வெல் காமிக்ஸில் இடம்பெறும் சூப்பர் ஹீரோக்களை வைத்து உருவாகியுள்ள 4வது படம் இது.
இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மொழியிலும், அந்தந்த மாநிலத்தின் சினிமா பிரபலங்கள், அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்துள்ளனர்.
அந்த வகையில், தமிழில் ராபர்ட் டோனியின் அயர்ன்மேன் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதியும், ஸ்கார்லெட் ஜான்சனின் பிளாக் விடோ கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியாவும் குரல் கொடுத்துள்ளனர்.

டிரெய்லரில் ஆரம்பித்தது
இப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியான போதே, இந்த விஷயம் விமர்சனத்துக்கு உள்ளானது. அயர்ன்மேனுக்கு விஜய் சேதுபதியின் குரல் செட்டாகவில்லை என்ற கருத்து சமூக வலைதளங்களில் வெகுவாக பேசப்பட்டது.

உண்மையாகிவிட்டது
இன்று படம் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் சொன்னது உண்மை என்று பேசப்படுகிறது. திரையரங்கைவிட்டு வெளியே வரும் ரசிகர்கள், இதனை தான் பேசிக்கொள்கிறார்கள்.

பயந்தது நடந்துவிட்டது
அயர்ன்மேனுக்கு விஜய் சேதுபதியின் குரல் சுத்தமாக செட்டாகவில்லை. ராபர்ட் டோனி உருவில் விஜய் சேதுபதி தான் கண்ணுக்கு தெரிகிறார் என்கிறார்கள். விஜய் சேதுபதி பயந்தது போலவே நடந்துவிட்டது.

ஆண்ட்ரியாவின் குரல்
ஸ்கார்லெட் ஜான்சனின் பிளாக் விடோ கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியாவின் குரல் கச்சிதமாக பொருந்துகிறார். காரணம், விஜய் சேதுபதி போன்று ஆண்ட்ரியாவுக்கு தனித்துவமான குரல் இல்லை.


Click it and Unblock the Notifications