பாவம்ய்யா விஜய் சேதுபதி.. ‘ஆர் யூ ஓகே பேபி’யை எப்டி யூஸ் பண்ணியிருக்காங்க பாருங்க!

நடிகர் விஜய் சேதுபதியின் குரலை சிலர் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தி உள்ளனர்.

சென்னை: விஜய் சேதுபதி குரலில் அதிமுக பிரச்சார ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இமேஜ் பார்க்காமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் இயல்பாக, தத்ரூபமாக நடிப்பவர் விஜய் சேதுபதி. சினிமாவைத் தாண்டி, அதோடு மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு. அதனால் தான் மக்கள் அவரை மக்கள் செல்வன் என அழைக்கின்றனர். அவரது படங்களுக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

இந்நிலையில், அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி வாக்கு சேகரிப்பது போன்ற ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வித்தியாசமான பிரச்சாரம்

வித்தியாசமான பிரச்சாரம்

குமுதா ஹேப்பி அண்ணாச்சி, ஆர் யூ ஓகே பேபி என விஜய் சேதுபதி பிரபலமான தனது பட டயலாக்குகளை எல்லாம் வைத்து வித்தியாசமாக செந்தில்நாதனுக்கு வாக்களிக்கச் சொல்வது போல் அந்த ஆடியோ உள்ளது.

விஜய் சேதுபதி பிரச்சாரம்

விஜய் சேதுபதி பிரச்சாரம்

இதைக் கேட்டவர்கள் நிஜமாகவே விஜய் சேதுபதி தான் அதிமுக வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்கிறாரோ என ஆச்சர்யம் அடைந்தனர். ஆனால், உண்மை அது இல்லை. தொழில்நுட்ப வளர்ச்சியால் யாரோ மிமிக்ரி செய்பவரை வைத்து விஜய் சேதுபதி பேசியது போலவே இப்படி ஒரு ஆடியோவை உருவாக்கியுள்ளனர்.

விஜய் சேதுபதியின் குரல்

விஜய் சேதுபதியின் குரல்

இந்த ஆடியோவை யார் தயாரித்தார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் தத்ரூபமாக விஜய் சேதுபதியே பேசுவது போல் உள்ளது. முன்பெல்லாம் நடிகர்கள் போன்று வேடமணிந்து சென்று வாக்கு சேகரிப்பார்கள். ஆனால், இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்களின் ஆதரவு பெற்ற நடிகர்களின் குரலை மிமிக்ரி செய்து இப்படி வாக்கு சேகரிக்கிறார்களே என மக்கள் ஆதங்கப் படுகின்றனர்.

விஜய் சேதுபதி மறுப்பு

விஜய் சேதுபதி மறுப்பு

இந்த வீடியோ குறித்து கேள்விப்பட்ட விஜய் சேதுபதி, அதில் பேசுவது நானில்லை எனத் தெரிவித்துள்ளார். அதோடு, ‘உங்க தொகுதிக்கு யார் நல்லது செய்யவாங்கன்னு நினைக்கறீங்களோ, அவங்களுக்கு ஓட்டு போடுங்க. ஆனா, நிச்சயம் ஓட்டு போடுங்க'' என அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X