twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வேண்டவே வேண்டாம்- ரசிகர் மன்றம் பற்றி விஜய் சேதுபதி

    By Shankar
    |

    விஜய் சேதுபதியின் படங்கள் பெற்ற வெற்றிக்கு இந்நேரம் அவரது ரசிகர் மன்றங்கள் மூலை முடுக்கெல்லாம் திறக்கப்பட்டு, அதற்கு ஒரு தலைவரும் உருவாகியிருக்க வேண்டாம்.

    ஆனால் அவரோ இந்த வியத்தில் மிகத் தெளிவாக இருக்கிறார்.

    தென்மேற்கு பருவக் காற்று தொடங்கி, இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா வரை அவர் நடித்தவை வெற்றிப் படங்கள்தான்.

    Vijay sethupathy

    ஆனால் இத்தனைப் படங்கள் நடித்தும், பலர் "என்ன தலைவா.. ஆரம்பிச்சடலாமா மன்றத்தை" என உசுப்பேற்றியும், மனிதர் அதே அசட்டுப் புன்னகையுடன்... இல்ல வேணாங்க என்று கூறிவிட்டு கடந்து செல்கிறார்.

    ஏன்... ரசிகர் மன்றங்கள் பிடிக்காதா?

    "எனக்கு ரசிகர் மன்றம் வைக்க பலர் அனுமதி கேட்டனர். கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. வேண்டாம் என்று மறுத்து விட்டேன்.

    நடிப்பது மட்டுமே என் வேலை. படம் நன்றாக இருந்தால் போதும். கதைதான் ஹீரோ. என்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடையக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

    எனது அடுத்த ரிலீஸ் பண்ணையாரும், பத்மினியும். அந்தப் படத்தைப் பார்த்து மகிழுங்கள். உண்மையான விமர்சனங்களைச் சொல்லுங்கள். என்னை நான் திருத்திக்கிறேன்," என்றார்.

    English summary
    Actor Vijay Sethupathy strictly says no to fan clubs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X