»   »  காம்பினேஷன் கூட ஓகே... ஆனா மாஸ் வேண்டாம்... விஜய்சேதுபதி புது முடிவு!

காம்பினேஷன் கூட ஓகே... ஆனா மாஸ் வேண்டாம்... விஜய்சேதுபதி புது முடிவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு பக்கம் ஸோலோ ஹீரோவாக விஜய்சேதுபதியின் மார்க்கெட் நல்ல நிலையில் இருந்தாலும் இன்னொரு பக்கம் மாதவன், கவுதம் கார்த்திக் என்று மற்ற ஹீரோக்களுடன் இணைந்தும் நடித்து வருகிறார். இது வினியோகஸ்தர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் சினிமாவைப் பொறுத்துவரை ஒரு ஹீரோ நடித்த முந்தைய படத்தை வைத்து தான் அந்த படத்தின் விலையை நிர்ணயிப்பார்கள். ஆனால் விஜய் சேதுபதி கலந்து கட்டி நடிப்பதால் அவரது படங்களுக்கு மட்டும் அப்படி விலை, மார்க்கெட் மதிப்பு நிர்ணயிக்கப்பட முடியவில்லையாம்.

Vijay Sethupathy says no to mass movies

ஆனால் இதுபற்றி விஜய்சேதுபதி கவலைப்படுவதாய் தெரியவில்லை. எனக்கு கதை தான் முக்கியம். என்னோட மார்க்கெட் வேல்யூ முக்கியம் இல்லை. இனிமே றெக்க மாதிரியான மாஸ் கமர்ஷியல் படமும் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிடுகிறாராம்.

இது ரசிகர்களுக்கு நல்லது... ஆனா எங்களுக்கு? என்று முழிக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

English summary
Actor Vijay Sethupathi is nowadays so no to mass subjects and opting only for good scripts.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil