அசைவற்று கிடந்த எஸ்பி ஜனநாதன்.. தட்டி எழுப்பி கண்கலங்கிய விஜய் சேதுபதி.. நடிகை உருக்கம்!

சென்னை: இயக்குநர் எஸ்பி ஜனநாதன் சுயநினைவின்றி இருந்ததை பார்த்த நடிகர் விஜய் சேதுபதி அவரை தட்டி எழுப்பி பார்த்து கண்கலங்கியுள்ளார்.

Recommended Video

Laabam Director S.P.Jananathan Admitted in Apollo Hospital | Vijay Sethupathi, Shruthi HAssan

இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் எஸ்பி ஜனநாதன்.

தற்போது விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசனை வைத்து லாபம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

லாபம் எடிட்டிங்

லாபம் எடிட்டிங்


லாபம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் எடிட்டிங் பணியில் இருந்து வீட்டிற்கு திரும்பிய எஸ்பி ஜனநாதன் பின்னர் மீண்டும் ஸ்டுடியோவுக்கு திரும்பவில்லை.

சுயநினைவின்றி..

சுயநினைவின்றி..

இதனால் சந்தேகமடைந்த உதவியாளர்கள், அவரது வீட்டில் சென்று பார்த்தனர். அப்போது மயங்கிய நிலையில் சுயநினைவின்றி கிடந்துள்ளார் ஜனநாதன். இதையடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் உள்ள ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினர். ஐசியூவில் என்ன எஸ்பி ஜனநாதனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

தட்டி எழுப்பி

தட்டி எழுப்பி

இந்நிலையில் நேற்று மருத்துவமனைக்கு சென்று எஸ்பி ஜனநாதனை நடிகர் விஜய் சேதுபதி நேரில் பார்த்துள்ளார். அப்போது எந்த அசைவுமே இன்றி இருந்த எஸ்பி ஜனநாதனை தட்டி எழுப்பியுள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் ஏன் இவ்வளவு வேகமா தட்றீங்க என கேட்டுள்ளனர்.

கண் விழிக்கவில்லை..

கண் விழிக்கவில்லை..

அதற்கு பதில் கூறிய விஜய் சேதுபதி, நான் அழைத்தால் எங்க டைரக்டர் எழுந்துவிடுவார் என கூறியுள்ளார். ஆனாலும் எஸ்பி ஜனநாதன் கண் விழிக்கவே இல்லை. அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

நடிகை சரண்யா

நடிகை சரண்யா

இந்த தகவலை காதல், பேராண்மை போன்ற படங்களில் நடித்த நடிகை சரண்யா தெரிவித்துள்ளார். பேராண்மை படத்திற்கு பிறகு நடிகை சரண்யா, எஸ்பி ஜனநாதனின் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X