ஒரே வாரத்தில் ஐந்து படங்களில் கையெழுத்து போட்ட விஜய்சேதுபதி
முன்பெல்லாம் ஒரு ஹீரோ முன்னணிக்கு வந்துவிட்டால் ஒரே ஆண்டில் 20 படங்களில் எல்லாம் நடித்து தள்ளுவார். சூப்பர் ஸ்டார் ரஜினியில் இருந்து ராமராஜன் வரை இதற்கு உதாரணம் உண்டு. ஆனால் இப்போது அப்படி இல்லை. ஒரு ஹீரோ ஒரு நேரத்தில் ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடிக்கிறார். இதில் விஜய்சேதுபதி மட்டும்தான் விதிவிலக்கு.
கடந்த ஆண்டு மட்டும் ஆறு படங்கள் விஜய் சேதுபதிக்கு ரிலீஸ் ஆகின. இன்னும் இரண்டு படங்கள் தயாராகி ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. தவிர ஐந்து படங்கள் படப்பிடிப்பில் இருக்கின்றன. சென்ற வாரம் ஒரு படத்துக்கு பூஜை போட்டார்கள்.

இவை மட்டுமில்லாமல் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐந்து புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் விஜய் சேதுபதி. கடந்த மூன்று மாதங்களாக விஜய் சேதுபதி கதை கேட்டு ஓகே சொல்லி வந்த படங்கள் இவை.
ஆக, 2019 வரை விஜய்சேதுபதியின் கால்ஷீட் டைரி ஃபுல்!


Click it and Unblock the Notifications











