அப்பாவிற்கு பதில் மகனா? பிக் பாஸ் வீட்டிற்கு வந்த விஜய்சேதுபதி மகன்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 15 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிகளை பலரும் விமர்சித்த நிலையில் தற்போது ஆட்டம் கொஞ்சம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. நேற்றைய எபிசோடில், விஜய் சேதுபதி, பார்வதி, திவாகர், அரோரா, சபரி என அனைவரையும் ஒட்டுமொத்தமாக விளாசினார். இதற்கு மேலாவது போட்டியாளர்கள் விளையாட்டில் தங்களது கவனத்தை செலுத்தி விளையாடுவார்கள் என்று ரசிகர்கள ஆவலுடன் உள்ளனர்.

Vijay Sethupathy Surya Sethupathi Naducenter Naducenter

விஜய் சேதுபதி மகன்: இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி, தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. சூர்யா சேதுபதி ஹீரோவாக நடித்த பீனிக்ஸ் திரைப்படம் ஜூலை மாதம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது சூர்யா சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடு சென்டர் வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 20ந் தேதி ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இந்த வெப் தொடரை நரு நாராயணன் இயக்கி உள்ளார். இதில், கூடைப்பந்து பயிற்சியாளராக சசிக்குமார் நடித்துள்ளார். மேலும், ஆஷா சரத், கலையரசன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அப்பாவிற்கு பதில் மகனா?: நடு சென்டர் வெப் தொடர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி மற்றும் வெப் தொடரில் நடித்த பலரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து போட்டியாளர்களுடன் கூடைப்பந்து விளையாடி நடு சென்டர் வெப் தொடர் குறித்து ப்ரோமோஷன் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் அப்பாவிற்கு பதில் மகனா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X