விஜய் படத்தில் நடித்தாலும் அஜித் ஸ்டைல்தான்.. விஜய் சேதுபதி எடுக்கும் அதிரடி முடிவு.. பக்கா மாஸ்!

Recommended Video

Thalapathy64 Update:தளபதி 64 வில்லன் முடிவாயிச்சு

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் விஜய் படத்தில் நடித்தாலும், அஜித் ஸ்டைலில் முக்கியமான படம் ஒன்றை நடிக்க இருக்கிறார்.

நடிகர் விஜய் சேதுபதி தற்போது மிகவும் பிஸியாக இருக்கிறார். அவர் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி உடன் நடிக்கிறார். மேலும் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

இதெல்லாம் போக அமீர் கான் உடன் இந்தியில் வேறு நடிக்கிறார். தற்போது தளபதி 64 படத்திற்க்கு விஜய் உடன் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இந்தி எப்படி

இந்தி எப்படி

இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த படம்தான் பட்லா. இந்த படத்தில் பிங்க் படத்தில் நடித்த அதே அமிதாப் பச்சன் மற்றும் டாப்ஸி ஆகியோர் நடித்து இருந்தனர். படமும் பெரிய அளவில் திரில்லாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரீமேக்

ரீமேக்

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதை தெலுங்கில் ரீமேக் செய்து இருந்தனர். தெலுங்கிலும் இந்த படம் பெரிய வெற்றி அடைந்தது. இந்த நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி முடிவு செய்துள்ளார். ஆம், தமிழில் விஜய் சேதுபதி இந்த படத்தை ரீமேக் செய்ய உள்ளார். ஆனால் இதற்கான இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் யார் என்று விவரம் வெளியாகவில்லை.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

ஏற்கனவே அமிதாப் பச்சன் மற்றும் டாப்ஸி நடித்த பிங்க் படத்தை நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை என்று ரீமேக் செய்து இருந்தார். தற்போது அஜித் பாணியில் அதேபோல் விஜய் சேதுபதி அமித் பச்சனின் சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X