»   »  விஜய் சேதுபதி - த்ரிஷா இணையும் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?

விஜய் சேதுபதி - த்ரிஷா இணையும் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெள்ளிக்கிழமை நாயகனான விஜய் சேதுபதி - த்ரிஷா இணையும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகிறது. வித்தியாசமாக '96' எனத் தலைப்பிட்டுள்ளனர் இந்தப் படத்துக்கு.

இந்த ஆண்டு சராசரியாக 2 மாதங்களுக்கு ஒரு படம் என்ற கணக்குப் படி விஜய் சேதுபதியின் ஆறு படங்கள் திரைக்கு வந்தன. ஆறில் நான்கு பழுதில்லை.

Vijay Sethupathy - Trisha movie titled as '96'

விஜய் சேதுபதியின் அடுத்த லிஸ்டில் 'புரியாத புதிர்', கே.வி ஆனந்த் இயக்கியுள்ள 'கவண்' ஆகிய படங்கள் திரைக்கு வரத் தயாராக உள்ளன. இதன் பின்னர், மெட்ராஸ் என்டர்ப்ரைசஸ் நந்தகோபால் தயாரிப்பில் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம் குமார் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இந்த படத்தில் முதன்முறையாக விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் இணைகிறார்கள்.

தற்போது இந்த படத்துக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் '96' என தகவல் வெளியாகியுள்ளது.

படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்பட இருப்பதாகவும், வரும் ஜனவரியில் படம் தொடங்கும் என்று தயாரிப்பாளர் தரப்பில் அறிவித்துள்ளனர்.

English summary
Vijay Sethupathy - Trisha starring new movie has been titled as 96.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil