பிரபாஸ் படத்தில் இவர்தான் வில்லனா?.. மாஸ்டர் பவானி நியாபகம் இருக்கா.. கொலை மாஸ் தான்!

சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இண்டியா ஸ்டாராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி; தற்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க கமிட் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை இயக்குவது யார் என்று தெரிந்தால் அசந்து போவீர்கள். ரன்வீர் கபூரை வைத்து 1000 கோடி அடித்துள்ளார் அந்த இயக்குநர்.

மகாராஜா படத்திற்கு பிறகு தனது செகண்ட் இன்னிங்சை தொடங்கியிருக்கும் விஜய் சேதுபதி, பன்ச் வசனம் பேசி மிரட்டும் நடிகராகவும் ஒரு படத்திலும், குடும்பத்தோடு கொண்டாடும் விதமாக ஒரு படமாகவும் நடித்து ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார். திடீரென்று ரத்தம் தெறிக்க வில்லன் கதாப்பாத்திரத்தில் வந்து மிரட்டி செல்கிறார். தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து பேசும் விதம் ரசிக்கும்படியே இருக்கின்றன. பின்னர் பிக்பாஸ் போட்டியை தொகுத்து வழங்கி மாஸ் காட்டி வருகிறார் விஜய் சேதுபதி. பிறரிடம் இருந்து கற்றுக்கொள்ளும் ஆசானாகவும் மாறிவிடுகிறார். இப்படி தான் நடிக்கும் படங்களில் மட்டும் வெர்சைடலாக இல்லாமல் வாழும் வாழ்க்கையையே வெர்சடைலாக மாற்றி கொண்டிருக்கிறார்.

vijay-sethupathy-villain-role-in-prabhas-film

ரஜினி பட டைட்டில்: அவர் நடிக்கும் படங்கள் சரியாக போகவில்லை என்ற விமர்சனங்கள் இருந்தாலும் வருடத்தில் மனதிற்கு நெருக்கமான 2 படங்களில் நடித்து ரசிகர்களின் அன்பை பெற்று விடுவார் விஜய் சேதுபதி. அதேபோன்று தற்போது சத்தமே இல்லாமல் பாண்டிராஜ் இயக்கும் புதிய நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தில் நித்யா மேனன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு ரஜினி பட டைட்டிலை வைக்க பேச்சு அடிபடுகிறது. ரஜினி, மீனா, ரோஜா நடித்த வீரா படம் சூப்பர் ஹிட் அடித்தன. இப்படத்தின் டைட்டில் தான் இப்படத்தின் கதைக்கு பொருந்தும் என இயக்குநர் கூறியுள்ளாராம். இதற்கு விஜய் சேதுபதியும் ஒகே சொல்லியிருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. விரைவில் நல்ல செய்தி வரும் என சினிமா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பிரபாஸ் படத்தில் விஜய் சேதுபதி: இது ஒருபக்கம் இருக்க அணிமல் பட இயக்குநர் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்கி 2898 படத்திற்கு பிறகு பிரபாஸ் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் சலார் 2, ராஜா சாப், ஸ்பிரிட் என எல்லாம் பெரிய பட்ஜெட் படங்களாக இருக்கிறது. ஏற்கனவே சலார் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது. கல்கி படமும் 1000 கோடி வசூலை எட்டியிருக்கிறது. பிரபாஸ் நடிக்கும் படத்திற்கென்று தனி மார்க்கெட் இருக்கிறது. இந்நிலையில், அர்ஜூன் ரெட்டி, அணிமல் போன்ற படங்களின் மூலம் இந்திய ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கும் சந்தீப் ரெட்டி வங்கா பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் படத்தை இயக்குகிறார்.

vijay-sethupathy-villain-role-in-prabhas-film

பவர்ஃபுல்லான வில்லன்: சமீபத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியானதுமே சினிமா ரசிகர்களின் கவனம் எல்லாம் பிரபாஸ் பக்கம் திரும்பியிருக்கிறது. ஸ்பிரிட் பிரபாஸின் 25ஆவது படமாகும். இப்படம் 8 மொழிகளில் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்கஸ்ட் பான் இண்டியா படமாக வெளியாக இருக்கிறது., இப்படத்தில் பவர் புல்லான வில்லன் கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அணிமல் படத்தில் ஹீரோவிற்கு இருந்த இமேஜை விட வில்லனாக நடித்த பாபி தியோல் கேரக்டர் பெரிதளவில் பேசப்பட்டது. அதே போன்ற வில்லன் கதாப்பாத்திரத்தில் தான் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறாராம்.

vijay-sethupathy-villain-role-in-prabhas-film

முன்னதாக இப்படத்தில் கொரியன் சூப்பர் ஸ்டார் மா டோங்-சியோக் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. விஜய் சேதுபதி ஜவான் படத்திற்கு பிறகு பான் இண்டியா ஸ்டாராகவும், தென்னிந்திய நடிகராகவும் புகழ் பெற்றிருக்கிறார். ஸ்பிரிட் படத்தில் அவர் இணைந்தால் மாஸ் தான் என ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X