லியோ படத்தில் விஜய் சேதுபதி?.. ட்விஸ்ட் வைத்த இயக்குநர்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்

சென்னை: இயக்குநர் ரத்னகுமார் பதிவு செய்திருக்கும் ட்வீட் லியோ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா என்ற கேள்வியை ரசிகர்களிடம் எழுப்பியிருக்கிறது.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு படங்களின் ஹிட்டுக்கு அடுத்ததாக விஜய்யின் லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். வாரிசு படம் பெற்ற கலவையான விமர்சனங்களுக்கு அடுத்து விஜய் இந்தப் படத்தில் நடிப்பதால் இப்படம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

லியோ ப்ரோமோ

லியோ ப்ரோமோ


லியோ படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், கௌதம் வாசுதேவ், மிஷ்கின், மாத்யூ தாமஸ், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். மாஸ்டர் பட கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இந்தப் படம் மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்யும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். படத்தின் டைட்டில் ப்ரோமோவும் அதை உறுதி செய்திருப்பதாக கூறிவருகின்றனர்.

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் லியோ?

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் லியோ?

லோகேஷ் கனகராஜ் தனது விக்ரம் படத்தில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற ஐடியாவை அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் கைதி படத்தின் கதாபாத்திரங்களை இணைத்தது ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. காஷ்மீரில் நடந்துவரும் லியோ ஷூட்டிங்கில் கலந்துகொள்வதற்காக கைதி படத்தில் நடித்த ஜார்ஜ், விக்ரம் படத்தில் நடித்த ஏஜெண்ட் டீனா ஆகியோரும் சென்றிருப்பதால் இந்தப் படமும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்குள் வருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

ட்விஸ்ட் வைத்த இயக்குநர் ரத்னகுமார்

ட்விஸ்ட் வைத்த இயக்குநர் ரத்னகுமார்

இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் படங்களுக்கு திரைக்கதையும், வசனமும் எழுதிவரும் ரத்னகுமார் பதிவு செய்திருக்கும் ஒரு ட்வீட் தற்போது ட்ரெண்டாகியுள்ளது. அந்த ட்வீட்டில் ஒரு பக்க கண்ணாடியை வைத்துக்கொண்டு Never Say Die என்று காஷ்மீரில் இருந்து குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளதோடு ரசிகர்களிடையே கேள்வி ஒன்றையும் எழுப்பியுள்ளது.

லியோவில் விஜய் சேதுபதி இருக்கிறாரா?

லியோவில் விஜய் சேதுபதி இருக்கிறாரா?

ரத்னகுமார் கையில் வைத்திருக்கும் கண்ணாடியானது விக்ரம் படத்தில் சந்தனம் கேரக்டரில் நடித்த விஜய்சேதுபதியின் கண்ணாடியை ஒத்திருக்கிறது. இதனால் லியோ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர். அதேசமயம் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி உயிரிழந்தது போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சூழலில் இது எப்படி சாத்தியம் என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்ப; படத்தில் விஜய் சேதுபதி இருக்கும் கண்டெய்னர் வெடிக்கும்படிதான் காட்சி இருக்கும் அதில் அவர் உயிரிழந்தாரா என்பது உறுதியாக தெரியாது. எனவே இதில் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்புகள் இருக்கலாம் எனவும் மறுதரப்பினர் கூறுகின்றனர்.

எதிர்பார்ப்பை அதிகம் வைத்துக்கொள்ளுங்கள்

எதிர்பார்ப்பை அதிகம் வைத்துக்கொள்ளுங்கள்

முன்னதாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான ரத்னகுமார், "லியோ படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்டுவிட்டன. இதனால் அடுத்த அப்டேட் வர தாமதமாகும். படம் குறித்த எதிர்பார்ப்பை பெரிதாகவே வைத்துக்கொள்ளுங்கள். அந்த எதிர்பார்ப்பைவிட படம் அதிக அளவு இருக்கும்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X