சம்பளத்தை உயர்த்தி கேட்ட விஜய் சேதுபதி.. ஓகே சொன்ன படக்குழு.. தளபதி 64ல் எவ்வளவு சம்பளம் தெரியுமா?
Recommended Video
சென்னை: நடிகர் விஜய்யின் 64வது படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்று விவரம் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய்யின் 64வது படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தளபதி 64 படம் வேகமாக தயாராகி வருகிறது.
இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இந்த படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி நேற்றுதான் ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன காரணம்
இந்த படத்திற்கு விஜய் சேதுபதி ஓகே சொல்ல நிறைய காரணம் இருக்கிறது என்கிறார்கள். படத்தின் கதையை கேட்டவுடன் விஜய் சேதுபதிக்கு பிடித்துவிட்டதாம். அதேபோல் தன்னுடைய ரோல் மிகவும் சிறப்பாக இருக்கிறது என்றும் விஜய் சேதுபதி கூறி உள்ளார்.

என்ன கதை
இந்த கதையில் விஜய் சேதுபதி வில்லன் என்றாலும் அவருக்கும் படத்தில் நிறைய காட்சிகள் இருக்குமாம். வில்லனாக இருந்தாலும் அவரது பக்கத்து நியாயங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள். கிட்டத்தட்ட விக்ரம் வேதா போல இந்த படத்தின் கதை இரண்டு ஹீரோக்களுக்கும் சமமான வாய்ப்பு அளிக்கும் என்கிறார்கள்.

விஜய் சேதுபதி
அதேபோல் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படங்களில் இதைவிட குறைவாகவே சம்பளம் வாங்குகிறார். பொதுவாக படத்தின் பட்ஜெட்டை பொறுத்து விஜய் சேதுபதி தனது சம்பளத்தை மாற்றிக்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

இல்லை
ஆனால் இந்த படத்திற்காக தன்னுடைய சம்பளத்தை அவர் உயர்த்தி உள்ளார். ஏனென்றால் அவர் தன்னுடைய மற்ற பட ஷூட்டிங்கை கைவிட்டுவிட்டு இந்த படத்திற்கு ஒப்புக்கொண்டு இருக்கிறார். அதனால் படத்தில் இவருக்கு 10 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் இதில் அவருக்கு ஹீரோவிற்கு நிகராக காட்சிகள் இருக்கும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











