விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லையோ.. 2019ல் ஒரே பஞ்சாயத்தா வருதே!
Recommended Video

சென்னை: 2018-ம் ஆண்டில் அதிக படத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு 2019-ம் ஆண்டு சரியாக இல்லை. இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே சர்ச்சைகள் விஜய் சேதுபதியை சுற்றி வருகின்றன.
அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சூப்பல் டீலக்ஸ் திரைப்படத்தில் "ஷில்பா" என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும், திருநங்கைகளிடையே பலத்த எதிர்ப்பு எழுந்தது.
படத்தில் திருநங்கைகளை அவமானப்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அந்த கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதியையும், படத்தின் இயக்குநரையும் கைது செய்ய வேண்டுமென திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீதை சர்ச்சை
இதற்கு முன்னதாக, விஜய் சேதுபதி பகவத் கீதைப்பற்றி தவறாக பேசியதாக ஒரு தனியார் தொலைக்காட்சியின் பெயரில் ஒரு புகைப்படம் இணையத்தில் பரவியது. ஆனால் காவல்துறை செயலி குறித்து அவர் தெரிவித்த கருத்தை, யாரோ மாற்றி பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து, அவர் ஆதாரத்துடன் மறுப்பு தெரிவித்த பின்னரே இந்த சர்ச்சை முடிந்தது.

ஒரு பொண்ணு வேணும்
இதேபோன்று 'கடலை போட ஒரு பொண்ணு வேணும்' என்ற திரைப்படத்தின் போஸ்டரை, விஜய் சேதுபதி வெளியிடுவார் என போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில், ஆபாச வார்த்தைகள் இடம் பெற்றிருந்தது. இதனைடுத்து, அவருக்கும், போஸ்டர் ஒட்டப்பட்டதற்கும் தொடர்பு இல்லை படத்தின் இயக்குநர் விளக்கம் அளித்ததால், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

சர்ச்சை அடங்கியது
போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்ததால், அவரது பெயரும் சர்ச்சையில் அடிபட்டது. பின்னர் அவருக்கும் போஸ்டர் ஒட்டப்பட்டதற்கும் சம்மந்தம் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்ட பின்னரே இந்த சர்ச்சை அடங்கியது.

விஜயனுக்கு ஆதரவு
அதேபோன்று, சபரிமலை விவகாரத்தில், பெண்கள் சபரிமலைக்கு செல்வதில் தவறில்லை எனவும், தான் அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயனை ஆதரிப்பதாகவும் தெரிவித்ததால், விஜய் சேதுபதிக்கு கண்டனங்கள் எழுந்தன.

அவெஞ்சர்ஸ் காமெடி
இதற்கு முத்தாய்ப்பாக அவெஞ்சர்ஸ் பட டப்பிங்கில் விஜய் சேதுபதியின் வாய்ஸ் பலரையும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது. பலரும் அதை சமூக வலைதளங்களில் கலாய்த்துக் கொண்டுள்ளனர். மொத்தத்தில் ஏறுமுகத்திலேயே இருந்த விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டு சோதனையுடன்தான் தொடங்கியுள்ளது


Click it and Unblock the Notifications











