»   »  அதிர்ஷ்டம் முன்னேற்றாது… சிவாவுக்கு கவுண்டர் கொடுக்கும் விஜய்சேதுபதி!

அதிர்ஷ்டம் முன்னேற்றாது… சிவாவுக்கு கவுண்டர் கொடுக்கும் விஜய்சேதுபதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகார்த்திகேயனையும் விஜய்சேதுபதியையும் போட்டியாளர்களாகப் பார்க்கிறது தமிழ் சினிமா. ஆனால் இருவரும் நாங்கள் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு தத்தமது படங்களில் சக நடிகரின் சிம்பல்களை வைத்தார்கள்.

ஆனால் இருவருக்கும் உண்மையில் போட்டி இருக்கிறது என்றுதான் சொல்கிறார்கள். சமீபத்தில் விஜய்சேதுபதி தனது பேட்டி ஒன்றில், "என்னுடைய வளர்ச்சிக்கு அதிர்ஷ்டம் காரணம் அல்ல. அதிர்ஷ்டம் முன்னேற வைக்காது. உழைப்பு மட்டும் தான் உயர்த்தும்," என்று மறைமுகமாக சிவகார்த்திகேயனை தாக்கியிருக்கிறார்.

Vijay Sethupatrhy Vs Sivakarthikeyan

காவிரி முதல் ரூபாய் நோட்டு வரை பொதுமக்களின் பிரச்னைகளில் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார் விஜய்சேதுபதி. தனது சம்பள சிக்கலுக்காக அரசியல்வாதிகளை நாடினார் சிவா.

வெளிநாடு, உள்நாடு என எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் செல்கிறார் சிவகார்த்திகேயன். ஆனால் விஜய்சேதுபதியோ ஏகத்துக்கும் பணம் கேட்பதாக புகார் சொல்கிறார்கள்.

இருவரில் யார் பெஸ்ட் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

English summary
Sources say that a cold war is running between actors Vijay Sethupathy and Sivakarthikeyan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil