Vijay: விஜய் மட்டுமில்லை.. Y பிரிவு பாதுகாப்பு பெற்ற நடிகர்கள் யார் யார்? பட்டியல் இதோ!

சென்னை: நடிகர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து அனைவருக்கும் தெரிந்ததே. சமூக வலைதளங்களில் விஜய் தமிழ் நாடு முழுவதும் அரசியல் பயணம் மேற்கொள்ளும்போது அவர் மீது முட்டைகளை வீசுவோம் என இணையத்தில் சிலர் பேசியது பரபரப்பானது. அதன் பின்னர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. Y பிரிவு பாதுகாப்பு எந்தெந்த நடிகர்களுக்கு எல்லாம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

நமது நாட்டில் பாதுகாப்பிற்காக மொத்தம் 6 வகையான பாதுகாப்பு பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதாவது X, Y, Y+, Z, Z+ , SPG என மொத்தம் 6 வகையான பாதுகாப்புகள், பாதுகாப்பு அச்சுறுத்தல்களை பொறுத்து வழங்கப்படுகிறது. பொதுவாக ஒருவருக்கு மத்திய அரசால், பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்றால் அதற்கு முன்னர், புலனாய்வுத்துறை ஒருவரின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மதிப்பிட்டு அது தொடர்பான அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்பிக்கும். அதன் பின்னர் மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய பின்னர், பாதுகாப்பு வழங்கப்படும்.

Vijay Shah Rukh Khan Salman Khan Kangana Ranaut

இதில் நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட Y பிரிவு பாதுகாப்பு என்பது சற்று குறைவான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. Y பிரிவு பாதுகாப்பில், 9 மிமீ பிஸ்டலுடன் ஒருவரும் ஸ்டென் துப்பாக்கியுடன் ஒருவரும் என மொத்தம் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பில் இருப்பார்கள். இவருக்கான பாதுகாப்புக் குழுவில் மொத்தம் 11 பேர் இருப்பார்கள். அவர்கள் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். இரவு நேரங்களில் இவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.

விஜய்: இப்படியான பாதுகாப்பு வளையத்திற்குள் தற்போது நடிகரும் தவெக தலைவருமான விஜய் உள்ளார். இவர் தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பேசும்போது, தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுப் பயணம் மேற்கொண்டால், அவர் மீது முட்டை வீசுவோம் என சொன்னார்கள். இது தொடர்பான ஆடியோ இணையத்தில் வேகமாக பரவியது. மேலும் விஜய்யின் பாதுகாப்புக்கு எதிராக சிலர் சதி திட்டம் தீட்டுவதால், அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்கள், இணையத்தில் விஜய்க்கு எதிராக முட்டைக்கு பயந்த கூமுட்டை என்ற ஹேஸ்டேக்கை கேவலமாக ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

பாலிவுட் பிரபலங்கள்: அதேபோல் நடிகர் விஜய்க்கு முன்னரும் சில நடிகர்களுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, பாலிவுட் நடிகர்களான நடிகர் ஷாருக்கான், நடிகர் சல்மான் கான் ஆகியோருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகையும் மக்களவை உறுப்பினருமான கங்கனா ரனாவத் திற்கு Y+ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கங்கனா ரனாவத் மக்களவை உறுப்பினராக தேர்வான பின்னர், விமான நிலையத்தில் காவல்துறை பெண் அதிகாரி அவரைத் தாக்கினார். சல்மான் கானின் நண்பர் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் சல்மான் கானுக்கும் Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர்: Y பிரிவு பாதுகாப்பு பெற்றுள்ள பிரபலங்கள் என ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் இருக்கும் நடிகர்கள், அனைவரும் பிரதமர் மோடியைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணைத்து பகிர்ந்துள்ளார். இதில் கங்கனா ரானவத் மட்டும் பாஜக எம்.பியாக உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X