விஜய் 59... ஜோடி நயன்தாரா இல்லை, சோனாக்ஷி!
விஜய் நடிக்கும் 59-வது படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க மும்பையிலிருந்து பிரபல நடிகை ஒருவரை ஒப்பந்தம் செய்யவிருக்கிறார்கள்.
அது சோனாக்ஷி சின்ஹாவா அல்லது தீபிகா படுகோனா என்பது விரைவில் முடிவாகிவிடும் என்கிறார்கள்.
விஜய் தற்போது தனது 58-வது படமான ‘புலி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிம்பு தேவன் இயக்குகிறார்.
விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தை வருகிற கோடை விடுமுறையில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

அட்லி இயக்கத்தில்
இப்படத்திற்கு பிறகு விஜய், அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

நயன்தாரா
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று செய்திகள் வெளிவந்தன.

வதந்திதான்
ஆனால், அது வெறும் வதந்தி என்று கூறப்பட்டது. தற்போது, விஜய்க்கு ஜோடியாக பாலிவுட்டின் முன்னணி நடிகைகளிடம் பேசி வருகிறார்கள்.

சோனாக்ஷி
சோனாக்ஷி சின்ஹா அல்லது தீபிகா படுகோனேவை நடிக்க வைக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

ரஜினி பட நாயகிகள்
சோனாக்ஷி சின்ஹாவும், தீபிகா படுகோனேவும் ஏற்கெனவே நேரடி தமிழ் படங்களில் நடித்துள்ளனர். தீபிகா படுகோனே ‘கோச்சடையான்' படத்திலும், சோனாக்ஷி சின்ஹா ‘லிங்கா' படத்திலும் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











