உஷாரான யானை.. யாராலும் ஏமாத்தவே முடியாது.. மகளிர் தின விழாவில் குட்டி கதை சொன்ன விஜய்!

சென்னை: தவெக சார்பில் இன்று சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம் மாமல்லபுரத்தில் நட்சத்திர ஓட்டலிலி நடைபெற்றது. இந்த விழாவில் தவெக தலைவர் மற்றும் அக்கட்சி பெண் நிர்வாகிகள் மற்றும் பல துறைகளில் சாதனை படைத்த பெண்கள் கலந்து கொண்டனர். இதில் பெண்களுக்கு பல வாக்குறுதிகளை அறிவித்த விஜய், வழக்கம் போல குட்டி கதை சொல்லி அசத்தினார்.

அதில், "நெஞ்சில் குடியிருக்கும் சிங்கப்பெண்கள் அத்தனை பேருக்கும் மகளிர் தின வாழ்த்துகள். ஒரு ஊரில் ஒரு பெரிய கோயில் யானை இருந்தது. அது யானை மிகவும் உஷாரான யானை. அந்த யானையை யாராலும் ஏமாற்றவே முடியாது. அப்படிப்பட்ட யானையை, ஜகஜால கில்லாடி ஈசியாக ஏமாற்றிவிட்டார். அவர் எப்படி ஏமாற்றினார் என்றால், தேங்காய் முடிக்குள், தேங்காய்க்கு பதிலாக சுண்ணாம்பை வைத்துக் கொடுத்திருக்கிறார். அந்த யானையும் அதை தேங்காய் என நினைத்து சாப்பிட்டுவிட்டது.

Vijay TVK Vijay Story

யானை கதை: உடனே ஒருவர் அந்த யானை உஷாரான யானையாச்சே எப்படி ஏமாத்துனா என கேட்டு இருக்கிறார். ஆனால், அந்த நபர் 'ஏமாத்துறதெல்லாம் தொழில் ரகசியம்' அதெல்லாம் உனக்கு தெரியாது என பெருமை பேசியிருக்கிறார். கொஞ்ச நாட்கள் கழித்து அந்த இரு நண்பர்களும் மீண்டும் சந்தித்துக்கொண்டனர். அப்போது, அந்த நண்பர் ஜகஜால கில்லாடியிடம் அன்னைக்கு எப்படி யானை ஏமாத்துன, அது உஷாரான யானை,
ஒரு வேளை அந்த யானை முதல் தடவை என்பதால் தெரியாமல் ஏமாந்திருக்கும் என்று நண்பன் சொல்கிறார்.

உஷாரான யானை: உடனே ஜகஜால கில்லாடி நான் மீண்டும் யானையை ஏமாற்றி காட்டுகிறேன் என சொல்லிவிட்டு, வாழைப் பழத்தை வாங்கி அதில் பஞ்சைத் திணித்து யானைக்கு கொடுக்க, இப்போது யானை தும்பிக்கையைச் சுழற்றி அவனை வீசி ஏறிகிறது. உடனே அந்த நண்பர் ஜகஜால கில்லாடியின் காதில் யானைக்கு ஞாபக சக்தி அதிகம் என்று சொல்லி இருக்கிறார். இதில் யானை தான் வாக்காளர்கள், அந்த ஜகஜால கில்லாடி யார் என்றால், அது யாராக வேண்டுமானால் இருக்கட்டும் இங்கு இருப்பது ஒத்தை யானை இல்லை ரெட்டை யானைகள், சிங்கப் பெண்கள் உங்களை யார் எதையும் சொல்லி ஏமாற்ற முடியாது என விஜய் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X