Vijay: கொஞ்சம் ஏமாந்தா போச்சு.. உஷாரா இருங்க.. விஜய் வெளியிட்ட திடீர் வீடியோ!

சென்னை: இந்திய தேர்தல் ஆணையம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலை சரி செய்யும் நோக்கில், சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் (SIR) இரண்டாம் கட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டம் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படுகிறது.

நவம்பர் 4 ந் தேதி தொடங்கி டிசம்பர் 4 வரை நடைபெற உள்ள இந்த SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நாடு முழுவதும் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை, குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், SIR குறித்து தவெக தலைவர் விஜய் திடீரென வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Vijay TVK party SIR

விஜய் வீடியோ : அதில், இந்திய அரசியல் சாசனம் நமக்கு கொடுத்திருக்கும் உரிமையில் மிகவும் முக்கியமானது வாக்குரிமை. ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறான் என்பதற்கு மிகவும் முக்கியமானது ஓட்டு உரிமை தான். ஒரு முக்கியமான விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் இந்த வீடியோவை நான் வெளியிட்டு இருக்கிறேன். இந்த விஷயத்தை நான் முதலில் கேள்விப்பட்டவுடன் எனக்கே அதிர்ச்சியாக தான் இருந்தது. நான் பேசிக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் யாருக்குமே, ஓட்டு போடும் உரிமையே இல்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? நான் இதை பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை உண்மை இதுதான். கொஞ்சம் ஏமாந்தா நம்மைப் போல லட்சக்கணக்கான மக்களுக்கும் இதே நிலைமைதான். ஓட்டு போடும் நிலைமையே இல்லாத நிலையும் வந்தாலும் வரலாம்.

SIR Form: அதற்கு முக்கிய காரணம் SIR, இது தமிழ்நாட்டில் எப்படி வேலை செய்யப்போகிறது. கடந்த ஜனவரி மாதம் எடுத்த கணக்கெடுப்பில் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாருக்குமே வாக்களிக்கும் உரிமை இல்லை. Both level officers வீடு வீடாக சென்று ஒரு பார்மை கொடுப்பார்கள். அதை நாம் நிரப்பி கொடுக்க வேண்டும். அந்ர பார்மை தேர்தல் ஆணையம் அதை சரி பார்த்து அனைத்தும் சரியாக இருந்தால், தேர்தல் ஆணையம் வெளியிடும் வாக்காளர் பட்டியலில் நம் பேர் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் வாக்களிக்க முடியும்.

கவனமா இருங்க: அந்த புது பட்டியல் வரும் வரை நாம் வாக்காளர்களா என்பதை உறுதி செய்ய முடியாது. இதனால் SIR மீது மக்களுக்கு பலவிதமான குழப்பங்கள் இருக்கிறது. இதனால் வீட்டிற்கு வரும் Both level officers அதிகாரிகளிடம் இதற்கான ஃபார்மை பூர்த்தி செய்ததற்கான ஆதாரத்தை நீங்கள் வாங்கிவைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக உங்கள் பகுதியில் இருக்கும் Both level officers யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள், தேர்தல் இணையத்தின் இணையதள பக்கத்திற்கு சென்றால், Both level officers அவர்களில் தொலைபேசி எண் கிடைக்கும், ஒருவேளை உங்களுக்கு SIR Form கிடைக்கவில்லை என்றால் நீங்களே Both level அதிகாரியை அழைத்து பார்மை பூர்த்தி செய்து தருவதற்கு அது வழி வகுக்கும் என தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.

More from Filmibeat

Read more about: vijay tvk party sir விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X