அவரிடம் கேட்டேன்.. நாளே வார்த்தைல சொன்னார்.. விஜய் சேதுபதி வில்லனான ரகசியத்தை கூறிய விஜய்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்ததற்காக கூறிய காரணத்தை நடிகர் விஜய் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும மாஸ்டர் படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினரும், படத்தில் நடித்திருக்கும் பிரபலங்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் ஹோட்டலில் இந்த நிகழ்ச்சியை நடத்துவது ஏன் என்ற காரணத்தை கூறினார்.

வருத்தம் உள்ளது
பிகில் படத்தின் ஆடியோ லாஞ்சின் போது ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டதால் போலீசார் தடியடி நடத்தினர். அந்த காரணத்தால்தான் இம்முறை ஹோட்டலில் நடத்தப்படுகிறது என்றும் கூறினார். ரசிகர்களுக்கு உள்ள அதே வருத்தம் தனக்கும் உள்ளது என்றும் அரை மனசுடன் தான் இதற்கு ஒத்துக்கொண்டேன் என்றும் விஜய் கூறினார்.

ஏன் ஒத்துக்கிட்டிங்க?
தொடர்ந்து பேசிய விஜய், படத்தில் தனக்கு வில்லனாக நடித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி குறித்தும் பேசினார். அவர் பேசியதாவது, தமிழ் சினிமாவுல ஒரு தவிர்க்க முடியாத இடத்துல இருக்கிறவரு விஜய் சேதுபதி. அவரு ஏன் இந்த படத்துல நடிக்கனும்.. அவருக்கு பிஸ்னஸ் இருக்கு.. அப்படி போகலாமே.. இதை ரொம்ப நாளே கேட்கனும் நினைச்சேன். ஒரு நாள் அவருக்கிட்ட கேட்டேன், நீங்க ஏன் இந்த படத்துல நடிக்க ஒத்துக்கிட்டீங்கன்னு?

ரொம்ப புடிக்குமுங்க
அதுக்கு ஸ்மைல் பண்ணிட்டு நாளே வார்த்தையில போயிட்டாரு. என்னன்னா, எனக்கு உங்களை ரொம்ப புடிக்குமுங்க..ன்னு சொன்னாரு என்றர் விஜய். மேலும் உங்க பேருல மட்டும் இடம் கொடுக்கல உங்க மனசுலேயும் இடம் கொடுத்துட்டீங்க. ரொம்ப நன்றி நண்பா என விஜய் சேதுபதிக்கு மேடையிலேயே நன்றி கூறினார் விஜய்.

கட்டிப்பிடித்து முத்தம்
நடிகர் விஜயும் நடிகர் விஜய் சேதுபதியும் மாஸ்டர் பட ஷுட்டிங்கின் போது நெருங்கிய நண்பர்கள் ஆகி விட்டனர். விஜய், நடிகர் விஜய் சேதுபதியை மத மாற்றம் செய்ய தூண்டினார் என்று பேச்சு எழுந்தபோது கூட போய் வேற வேலைய பாருங்கடா என காட்டமாக கூறினார். மேலும் விஜயை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போட்டோக்களும் வைரலானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











