நான் சொன்னதைக் கேட்டு விஜய் அதிர்ச்சியாகிவிட்டார்... இயக்குனர் அமீர் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு!
சென்னை : மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதிபகவன் என தொடர்ந்து தரமான படங்களை கொடுத்தவர் இயக்குனர் அமீர்
மிகக்குறைவான படங்களை இயக்கியிருந்தாலும் ஒவ்வொன்றும் தமிழ் சினிமாவில் காலாகாலத்திற்கும் நின்று பேசும் அளவிற்கு வெற்றி படங்களாக அவை உள்ளன
இந்த நிலையில் நடிகர் விஜய்யை சந்தித்து பேசுகையில் தான் சொன்னதை கேட்டு விஜய் அதிர்ச்சி ஆகி விட்டதாக அமீர் கூறியுள்ளார்.

வடசென்னை ராஜன்
தமிழ் சினிமாவில் இப்போது உள்ள காலநிலையில் இயக்குனர்கள் பலரும் நடிகர்களாக வலம் வருகின்றனர். அந்த வகையில இயக்குனர் அமீரும் வடசென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் நடித்து அதில் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து இப்பொழுது பல படங்களில் ஹீரோவாகவும் முக்கிய வேடங்களிலும் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

காதலை மிக வித்தியாசமாக
மௌனம் பேசியதே மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான அமீர் இளம் ரசிகர்களால் அதிகமாக கவனிக்கப்பட்டு முதல் படத்திலேயே காதலை மிக வித்தியாசமாக காட்டியதைத் தொடர்ந்து ராம், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களும் தேசிய அளவில் மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது.
அமீர் தொடர்ந்து படங்களை இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது இந்த நிலையில் யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அமீர் கடைசியாக ஆதிபகவன் என்ற படத்தை இயக்கினார்.

இறைவன் மிகப்பெரியவன்
இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னையில் ராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்த அமீருக்கு அந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது. வடசென்னை கொடுத்த மிகப் பெரிய அங்கீகாரத்தை தொடர்ந்து இப்பொழுது அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் அமீர் ஆர்யாவின் நடிப்பில் உருவாகிவரும் சந்தனத்தேவன் மற்றும் இறைவன் மிகப்பெரியவன் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்த நிலையில் விஜய் உடன் பணியாற்ற இருந்த சுவாரஸ்ய நிகழ்வை தற்போது பகிர்ந்துள்ளார்.

இரண்டு கதைகளுமே விஜய்க்கு பிடித்துப்போக
2009ல் விஜய்யை சந்தித்து கதை கூறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது விஜய்யிடம் இரண்டு கதைகளை அவர் கூறியுள்ளார். இரண்டு கதைகளுமே விஜய்க்கு பிடித்துப்போக இதில் எதை முதலில் செய்யலாம் என விஜய் கேட்டதற்கு அது உங்களுடைய விருப்பம் என அமீர் கூறியுள்ளார். உடனேயே படத்தை பண்ணலாமா இல்ல கொஞ்சம் டைம் எடுத்துக்கலாமா என விஜய் கேட்டதற்கு..

விஜய் அதிர்ச்சியாகிவிட்டார்
அதெல்லாம் எந்த அவசரமும் இல்லை என்றாராம் அதற்கு விஜய் அதுவரைக்கும் நீங்க வெயிட் பண்ணுவீங்களா எனக் கேட்டுள்ளார். அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்க நான் இன்னும் திரைத் துறையில் தொடர்ச்சியாக மிக வேகமாக பயணித்தாலே நான்கு அல்லது ஐந்து படங்களுக்கு மேல் பணியாற்றுவதற்கு வாய்ப்பு இல்லை எனக் கூறியதைக் கேட்ட விஜய் அதிர்ச்சியாகி என்னங்க சொல்றிங்க எனக் கேட்டுள்ளார். அந்த சிறிய இடைவேளை எப்பொழுது நீண்ட இடைவெளியாகி அமீர் விஜய் இணையும் படம் இன்று வரை உருவாகாமல் உள்ளது.


Click it and Unblock the Notifications











