டிவிட்டரில் இணைந்தார்களா விஜய்யின் மகனும் மகளும்? பரபரப்பு விளக்கம்!

சென்னை: நடிகர் விஜய்யின் மகன் மற்றும் மகள் பெயரில் வலம் வரும் டிவிட்டர் கணக்குகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி பேசும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.

விஜய் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார்.

பாடல் காட்சிகள்

பாடல் காட்சிகள்

இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் ஜார்ஜியாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சென்னையில் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஜேசன் விஜய்

ஜேசன் விஜய்

ஆனால் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்ததால் படப்பிடிப்பை தொடர முடியாமல் போனது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் டிவிட்டரில் இணைந்ததாக டிவிட்டர் கணக்கு ஒன்று வலம் வருகிறது.

திவ்யா சாஷா

திவ்யா சாஷா

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் ஜேசன் விஜய்யின் டிவிட்டர் கணக்கை பின்தொடர தொடங்கி விட்டனர். ஏற்கனவே விஜய்யின் மகள் திவ்யா சாஷா டிவிட்டரில் இணைந்ததாகவும் பிரபல நடிகரிகன் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லி பதிவிட்டதாகவும் டிவிட் ஒன்று வைரலானது.

போலியானவை..

போலியானவை..

இந்நிலையில் ஜேசன் விஜய் மற்றும் திவ்யா சாஷா ஆகியோரின் பெயரில் வலம் வரும் டிவிட்டர் கணக்கு குறித்து விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் இருவர் பெயரிலும் உள்ள டிவிட்டர் கணக்குகள் போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி கணக்குகள் அதிகம்

போலி கணக்குகள் அதிகம்

மேலும் டிவிட்டர் மட்டுமின்றி வேறு எந்த சோஷியல் மீடியாவிலும் அவர்கள் இருவருக்கும் கணக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபலங்களின் பெயர்களில் போலி கணக்குகள் தொடங்கப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

Recommended Video

நண்பன் இல்லாமல் நான் இல்லை | Manivananனை நினைவுகூர்ந்த Sathyaraj
மயில்சாமி விளக்கம்

மயில்சாமி விளக்கம்

நடிகர்கள் மயில்சாமி, சார்லி மற்றும் செந்தில் ஆகியோரின் பெயர்களில் டிவிட்டரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு தகவல்கள் பகிரப்பட்டன. அதில் மயில்சாமி தனக்கு எந்த சோஷியல் மீடியாவிலும் கணக்கு இல்லை என விளக்கம் அளித்தார்.

போலி கணக்கு முடக்கம்

போலி கணக்கு முடக்கம்

அதனை தொடர்ந்து நடிகர் சார்லியும் தனது பெயரில் போலி டிவிட்டர் கணக்கு இருப்பதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகார் அளித்த 30 நிமிடத்தில் போலி கணக்கு முடக்கப்பட்டது.

நிம்மதியோ போய்விட்டது

நிம்மதியோ போய்விட்டது

நேற்று முன்தினம் நடிகர் செந்தில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தனது பெயரில் உள்ள போலி கணக்கு குறித்து புகார் அளித்தார். போலி டிவிட்டர் கணக்கால் தனது நிம்மதியே போய்விட்டது என்றும் அவர் வேதனைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X