ரூ 200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிம்பு தேவன் - விஜய் படம்

By Shankar

முழுக்க முழுக்க கற்பனை உலகில் நடக்கும் கதையாக உருவாகும் சிம்பு தேவன் - விஜய் படத்தின் பட்ஜெட் ரூ 200 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் 58-வது படமாக உருவாகும் இந்த பெயரிடப்படாத படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நாயகிகளாக நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு நவம்பரில் தொடங்குகிறது.

தம்பி ராமய்யா

தம்பி ராமய்யா

தற்போது இப்படத்துக்கான நடிகர், நடிகையர் தேர்வை நடத்தி வரும் சிம்புதேவன், தம்பி ராமையாவை இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஜில்லாவில்...

ஜில்லாவில்...

தம்பி ராமையா ஏற்கெனவே விஜய்யுடன் இணைந்து ‘ஜில்லா' படத்தில் நடித்துள்ளார். இதைத் தவிர தற்போது ரஜினி நடிக்கும் ‘லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்காக 32 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி நடித்துக் கொடுத்துள்ளார்.

பட்ஜெட் ரூ 200 கோடியாமே!

பட்ஜெட் ரூ 200 கோடியாமே!

விஜய்-சிம்புதேவன் இணையும் புதிய படத்திற்கு நட்டி நடராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.200 கோடி என்கிறார்கள். விஜய்யின் பி.ஆர்.ஓ. மற்றும் மேனேஜரான பி.டி.செல்வகுமார்தான் இதன் தயாரிப்பாளர்!

ஐ படத்தை மிஞ்சியது

ஐ படத்தை மிஞ்சியது

இந்த பட்ஜெட் உண்மையாக இருந்தால், தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட் செலவில் உருவாகும் முதல் படம் இதுவாகத்தான் இருக்கும். ஷங்கர் இப்போது உருவாக்கி வரும் ஐ படத்துக்கே ரூ 150 கோடிதான் பட்ஜெட்டாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X