விஜய் - சிம்பு தேவன் படத்தின் ஷூட்டிங் நவம்பரில் தொடக்கம்
விஜய் - சிம்பு தேவன் இணையும் புதிய படம் வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தொடங்குகிறது.
லைகா நிறுவன தயாரிப்பில் விஜய் நடித்துள்ள கத்தி படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு சிம்பு தேவன் இயக்கத்தில் புதிய படம் நடிக்கிறார் விஜய்.
இது விஜய் நடிக்கும் 5வது படமாகும். இதில் நடிகை ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறார்.

கன்னடத்தில் பிரபல நடிகராகத் திகழும் சுதீப் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார் நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியம். சதுரங்க வேட்டையின் ஹீரோ இவர்.
விஜய்யின் மேனேஜர் பிடி செல்வகுமார் - ஷிபு தயாரிக்கிறார்கள்.
இந்தப் படம் முழுக்க முழுக்க கற்பனை உலகில் நடக்கும் கதையாக உருவாகிறது. படப்பிடிப்பு வரும் அக்டோபர் 8-ம் தேதி தொடங்குகிறது.
Comments


Click it and Unblock the Notifications