எஸ்.ஏ.சி கட்டிய புது வீடு.. ஆப்சென்ட் ஆன விஜய்.. இன்னும் மோதல் தீரவில்லையா?.. அதுதான் காரணமா?

சென்னை: அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் விஜய் கரூர் துயர சம்பவத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டவர்களை நேரில் வரவழைத்து ஆறுதல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஒருபக்கம் இருக்க அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் புது வீடு கிரஹபிரவேசம் செய்தார். ஆனால் அதில் விஜய் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கலந்துகொள்ளாதது விவாதமாகியிருக்கிறது.

தந்தையின் துணையோடு சினிமாவுக்கு வந்த விஜய் தனது திறமையை வளர்த்துக்கொண்டு தனக்கான சாம்ராஜ்ஜியத்தை கட்டி எழுப்பினார். தொடர்ந்து உழைத்துவந்த அவர் ஒருகட்டத்தில் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். அவரை சுற்றி இப்போது பலர் இருந்தாலும் இந்த ஐடியாவுக்கு விதை போட்டது என்னவோ அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான் என்பதில் மாற்று கருத்தில்லை.

வெடித்த மோதல்: ஆனால் கடந்த சில வருடங்களாகவே அவருக்கும் தந்தைக்கும் இடையே மோதல் வெடித்ததாக தகவல்கள் வட்டமடித்துக்கொண்டே இருந்தன. அதனை சந்திரசேகரும் ஒருசில பேட்டிகளில் வெளிப்படையாக உறுதி செய்திருந்தார். அதேசமயம் எங்களுக்குள் வந்திருக்கும் சண்டை என்பது எல்லா வீட்டிலும் தந்தைக்கும், மகனுக்கும் இடையே வரும் சண்டைதான் என்றும் விளக்கமளித்திருந்தார்.

Vijay Skips Father S A Chandrasekhar s Housewarming Ceremony Sparks Fresh Speculation Among Fans
Photo Credit:

முதல் மாநாட்டில் ப்ரெசண்ட்: விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி முதல் மாநில மாநாட்டினை விக்கிரவாண்டியில் நடத்தியபோது தந்தை எஸ்.ஏ.சியும், தாய் ஷோபாவும் முதல் வரிசையில் அமர்ந்து பெருமை பொங்க பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ஆசீர்வாதமும் வாங்கினார் விஜய். இதனால் அவர்களுக்குள் இருந்த மோதல் தீர்ந்துவிட்டதாக்வே நினைக்கப்பட்டது.

சமீபத்திய பேச்சு: சமீபத்தில்கூட ஒரு விழாவில் கலந்துகொண்டார் சந்திரசேகர். அப்போது, 'இருப்பது ஒரு வாழ்க்கைதான். யாருக்கு பயப்பட வேண்டும். என் ரத்தம்தான் விஜய். இதுவரை நான் எந்த அரசியல் கட்சியிலும் இருந்ததில்லை. ஆனால் இப்போது தவெகவில் இருக்கிறேன்' என பேசியிருந்தார். இதனால் அவர்களுக்குள் இருந்த சச்சரவுகள் நீங்கிவிட்டதாக விஜய் ரசிகர்கள் தங்களுக்குள் உறுதி செய்ய ஆரம்பித்தார்கள்.

ஆப்சென்ட் ஆன விஜய்: ஆனால் சமீபத்திய நிகழ்வு ஒன்று அந்த உறுதியை அசைத்துப்பார்க்கும்படி மாறிவிட்டது. அதாவது சந்திரசேகர் புதிய வீடு கட்டி கிரஹபிரவேசம் செய்தார். அதில் தனது மனைவியுடன் கலந்துகொண்டார். மேலும் அவரது நண்பர்களும் அந்த விழாவில் கலந்துகொண்டார்கள். ஆனால் விஜய் அவரது மனைவி சங்கீதா, குழந்தைகள் என யாரையும் காணவில்லை. இதை வைத்து மீண்டும் அவர்களுக்குள் சண்டை ஆரம்பித்துவிட்டதோ என்று பலரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

என்ன காரணம்?: ஆனால் கரூர் துயர சம்பவத்தால் உச்சக்கட்ட மன வேதனையில் இருந்ததால்தான் விஜய் அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருக்கமாட்டார் என ரசிகர்கள் கூறுகிறார்கள். அதேசமயம் விஜய்தான் கலந்துகொள்ளவில்லை சரி சங்கீதாவும், குழந்தைகளும் ஏன் வரவில்லை; ஏதோ ஒரு புகைச்சல் இருக்கத்தான் செய்கிறது என விஜய்க்கு எதிர்தரப்பினர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த விவகாரம்தான் சோஷியல் மீடியாவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

More from Filmibeat

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X