»   »  வல்லரசாவது இருக்கட்டும்.. முதலில் விவசாயிகள் பிரச்சினையைப் பாருங்க! - அரசுக்கு விஜய் குட்டு

வல்லரசாவது இருக்கட்டும்.. முதலில் விவசாயிகள் பிரச்சினையைப் பாருங்க! - அரசுக்கு விஜய் குட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

வல்லரசாவது முக்கியமல்ல.... முதலில் விவசாயிகளுக்கான நல்லரசு நாடாக இந்தியா மாற வேண்டும் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.

அவரது இந்த திடீர் அரசியல் பேச்சு பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Vijay slammed govt for not focusing on farmers issues

சென்னையில் நேற்று ஒரு விருது விழாவில் பங்கேற்ற விஜய் பேசுகையில், "நாம் அனைவரும் நன்றாக இருக்கும் நிலையில், நமக்கெல்லாம் உணவளிக்கும் விவசாயிகள் நன்றாக இல்லை.

நமக்கு சோறு போடும் விவசாயிகள் நன்றாக இல்லை. 3 வேளை உணவு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு தெரியாமல் போய்விட்டதாக கூறிய விஜய், அடுத்த சந்ததிக்கு உணவு இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அரிசியை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதை இலவசமாகப் பெற ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறார்கள் என்றும், விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட.

முதலில் விவசாயிகளுக்கான நல்லரசு நாடாக இந்தியா மாற வேண்டும், வல்லரசாக மாறுவதை பிறகு பார்க்கலாம்," என்றார்.

English summary
Actor Vijay has slammed the union govt for not giving importance to farmers issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil