Vijay: உள்ளே வரும் போதே விஜய்யை தள்ளிவிட்ட தொண்டர்கள்.. தர்ம அடி கொடுத்த புஸ்ஸி ஆனந்த்!

நெல்லை: நடிகர் விஜய் அரசியலில் தீவிரம் காட்டி வரும் நிலையில், மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் நெல்லை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்திட இன்று நெல்லையில் கேடிசி நகரில் உள்ள மாதா மாளிகைகுக்கு வருகை தந்த விஜய் 1500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறார்.

விழா மேடைக்கு விஜய் வருவதற்கு முன்பாகவே புஸ்ஸி ஆனந்த் ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டு நிகழ்ச்சியை எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் சீரும் சிறப்பாக செய்ய வேண்டும் என மைக்கைப் பிடித்துக் கொண்டு டென்ஷனாகி கத்திக் கொண்டு இருந்தார்.

Vijay slightly slipped due to some VMI persons pushed him

எல்லை மீறிய ரசிகர்கள்: விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த விஜய் தேமுதிக அலுவலகத்துக்கு சென்ற நிலையில், விஜயகாந்த் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி விட்டு விஜய் திரும்பும் போது கூட்ட நெரிசலில் சில ரசிகர்கள் அவரை கிள்ளி முத்தம் கொடுத்தனர். விஜயகாந்த் தொண்டர்கள் சிலர் ஆத்திரத்தில் விஜய் மீது செருப்பு வீசியதாக சில வீடியோக்கள் தீயாக பரவின. இந்நிலையில், நெல்லை மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார் விஜய்.

1500 பேருக்கு நிவாரணம்: சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க விஜய் வருகை தரவில்லை. அவருக்கு பதிலாக அவரது மக்கள் இயக்கத்தினரை உதவி செய்ய சொல்லியிருந்தார். இந்நிலையில், நெல்லைக்கு வந்த விஜய் மக்களை இருக்கையில் அமர வைத்து, அவரே ஒவ்வொருவரிடமும் நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கி வரும்

தள்ளிவிட்ட தொண்டர்கள்: நடிகர் விஜய் உள்ளே வரும் போதே கூட்ட நெரிசல் அலைமோதின. எப்படியாவது விஜய்யை தொட்டுப் பார்த்து விடமாட்டோமா என்கிற ஆர்வத்தில் விஜய் உள்ளே வரும் போதே சில தொண்டர்கள் அவர் மீது மோதி தள்ளி விட நடிகர் விஜய் தடுக்கி விழ பார்த்தார். ஆனால், சுதாரித்துக் கொண்டு கீழே விழவில்லை.

தர்ம அடி: தள்ளிவிட்ட தொண்டருக்கு விஜய் அருகே நின்றிருந்த புஸ்ஸி ஆனந்த் தர்ம அடி கொடுத்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களுக்கு செய்ய வேண்டிய நிவாரண உதவிகளை விஜய் மேற்கொண்டு செய்த விதம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி வருகிறது. புத்தாண்டு முன்னிட்டு தளபதி 68 லுக் வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதை விட செம ட்ரீட்டாக விஜய்யின் தரிசனம் கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X