Vijay: விஜய் மைண்ட் வாய்ஸ்.. மைக்கு கொடுத்தது ஒரு குத்தமாய்யா.. மாணவியின் அப்பா பண்ண வேலை!
சென்னை: 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் டாப் 3 மதிப்பெண்களை எடுத்த மாணவர்களை தொகுதி வாரியாக பிரித்து நடிகர் விஜய் இன்று நடைபெற்ற விழாவில் பரிசு வழங்கி கெளரவித்தார்.
விருது விழாவில் பல சுவாரஸ்ய விஷயங்கள் நடைபெற்றதை பார்த்து விஜய் ரசிகர்களே வயிறு எரியுது என பொறாமைப்பட ஆரம்பித்து விட்டனர்.
ஒரு சில மாணவர்கள் மைக்கை பிடித்து பேசிய நிலையில், ஒரு மாணவியின் அப்பா பேசியது நடிகர் விஜய்யையே அதிர்ச்சி அடைய வைத்து விட்டது.

காலில் விழுந்த மாணவிகள்: நடிகர் விஜய்யை பார்த்ததுமே பல மாணவ மாணவிகள் காலில் விழுந்தனர். நடிகர் விஜய் உடனடியாக அவர்களை தூக்கி விட்டு சால்வை அணிவித்து விருது வழங்கி பரிசுத் தொகையும் கொடுத்து மாணவர்களின் குடும்பத்தினருடன் நின்று க்ரூப் போட்டோவையும் எடுத்துக் கொண்டார்.
எமோஷனல் கனெக்ட் ஒரு சில மாணவிகள் விஜய்யை பார்த்ததுமே அண்ணா என ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தினர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நடிகர் விஜய் காட்டிய அன்பு மற்றும் சாதி, மத பேதம் பார்க்காமல் மாணவர்களை தூக்கி வைத்துக் கொண்டு அவர் மேடையில் பழகியது என பக்கா எமோஷனல் கனெக்ட்டாக அந்த நிகழ்ச்சி சென்றது.
Fan Girl Moment 🔥🔥#VIJAYHonorsStudents#Leo @actorvijaypic.twitter.com/CMwmaMenQh
— Mᴜʜɪʟツ (@MuhilThalaiva) June 17, 2023
விஜய்யை வெட்கப்பட வைத்த மாணவி: மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பாராட்டி பேசி விட்டு கடைசியாக ஒண்ணு சொல்றேன் என சொல்லி விட்டு அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே விஜய் அண்ணா என சொன்னதும் விஜய் வெட்கப்படவே ஆரம்பித்து விட்டார்.
வாரிசு படத்தின் ரசிகர்கள் சந்திப்பில் கூட நடக்காத பல சுவாரஸ்ய நிகழ்வுகள் அதுவும் விஜய் பேசியது முதல் அனைத்துமே லைவாக போடப்பட்டது ஒட்டுமொத்த தளபதி ரசிகர்களையும் டிவி முன்னாடியும் மொபைல் உடனுமே கட்டிப் போட்டு விட்டது.
Parents Request to Thalapathy Vijay to Do This Same program for collage Students too !#VIJAYHonorsStudents #NaaReadypic.twitter.com/B8oHHHiq9c
— Roвιɴ Roвerт (@PeaceBrwVJ) June 17, 2023
ஷாக் கொடுத்த மாணவியின் அப்பா: அதில், ஒரு மாணவியின் அப்பா விஜய் சார் இந்த டாப்பிக்கை பேச வேண்டாம் என்று சொன்னாலும், இங்கே வந்திருக்க எல்லாரும் அண்டர் 18, நீங்க இதே போல கல்லூரியில் யுனிவர்ஸிட்டி டாப் எடுத்த மாணவர்களை சந்தித்து பரிசு கொடுத்தால் நீங்க நினைச்சது நடக்கும் என அரசியல் ரீதியாக அப்பட்டமாக பேசி விஜய்யை அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டார்.
மேலும், அந்த இரண்டு பேரைத் தாண்டி யாராவது புதுசா வரவேண்டும் என மாணவியின் அப்பா திமுக மற்றும் அதிமுகவை குறிப்பிட்டே சொல்லி உள்ளார் என நெட்டிசன்கள் விஜய்யின் மைண்ட் வாய்ஸை அந்த மாணவியின் அப்பா அப்படியே கேட்ச் பண்ணி அப்பட்டமாக பேசி விட்டார் என கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











