நடிகர் விஜய் மகனின் முதல் படத்துக்கான சம்பளம் எவ்வளவு தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: சினிமாவில் நடிக்க உள்ள நடிகர் விஜய் மகனின் முதல் படத்திற்கான சம்பளம் குறித்த தகவலை கூறியிருக்கிறார் பிகே.
Recommended Video
தமிழ் சினிமாவின் முக்கியமான மற்றும் சுவாரசியமான தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், தெலுங்கில் ஒளிப்பரப்பான பிகில் படத்தின் மூலம் அம்மாநிலத்தில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.

இதேபோல் கொரோனா அச்சுறுத்தலால் அண்ணாத்த படத்தில் இருந்து இரண்டு சண்டைக்காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார் பிகே. மேலும் நடிகர் பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த தகவல்களையும் தெரிவித்துள்ளார்.
அஜித்தின் வலிமை படம் டிராப் செய்யப்படுவதாக வெளியான தகவல் பொய் என்று புரெடியூசர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும் விஜய் மகன் சஞ்சய், லலித்குமார் புரடெக்ஷனில் முதல் முறையாக நடிக்கும் படத்திற்கு சம்பளம் ஒன்றரை கோடி என்றும் கூறியிருக்கிறார் பிகே.


Click it and Unblock the Notifications











