Vijay Son: விஜய் திருமண நாளுக்கு 10 தினங்களுக்கு முன்.. ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் மாஸ் அப்டேட்!

சென்னை: தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய், முறையாக திரைப்படவியல் பயின்ற இவர், தற்போது, லைக்கா புரெடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் தனது முதல் படத்தை இயக்கி வருகிறார். படம் குறித்த பேச்சு வார்த்தைகள் கடந்த ஆண்டில் இருந்தே இருந்தாலும், கடந்த சில மாதங்களாக தான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் அறிவிப்பு ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

ஜேசன் சஞ்சய் சினிமாவில் நடிக்க வர வேண்டும் என்ற கோரிக்கையை பல ரசிகர்கள் முன்வைத்து வந்தாலும் அவர் தேர்வு செய்தது, இயக்குநர் ஆவது தான். இது மட்டும் இல்லாமல், விஜய்க்குமே கூட ஜேசன் சஞ்சய் நடிக்க வரவேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆனால் தனது ஆசையை மகன் மீது திணிக்க விரும்பாத விஜய் அமைதியாக இருந்துள்ளார். இது மட்டும் இல்லாமல், தந்தை மகன் சப்ஜெக்ட் ஒன்று ஒரு இயக்குநரால் விஜய்க்கு கதை சொல்லப்பட்டுள்ளது. விஜய்க்கும் அந்த படத்தில் தனது மகனுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டுள்ளது.

Vijay Son Jasan Sanjay Debut Movie Title Will Announce August 15th
Photo Credit:

விஜய்யின் விருப்பம்: இயக்குநரிடம் கூறி தனது மகனிடம் கதை சொல்லச் சொல்லியுள்ளார். கதையைக் கேட்ட ஜேசன் சஞ்சய் நடிக்க விருப்பமில்லை எனக் கூறியுள்ளார். இதனால் விஜய் செம அப்செட் ஆகியுள்ளார். ஆனாலும் தனது எண்ணத்தையும் ஆசையையும் மகன் மீது திணிக்காமல் இருந்துள்ளார். ஜேசன் சஞ்சய்க்கு தனது தாத்தா எஸ்.ஏ.சி போல இயக்குநர் அவதாரம் எடுப்பதில் தான் அதிக ஆர்வம் இருந்துள்ளது. அதனால்தான், அவர் தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

லைகா: இது மட்டும் இல்லாமல், யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் நேரடியாகவே இயக்குநர் அவதாரம் பூசியுள்ளார் ஜேசன் சஞ்சய். லைகா தமிழ் சினிமாவில் தயாரிப்பு நிறுவனமாக காலடி எடுத்து வைக்கும் போது, அவர்கள் முதன் முதலில் தயாரித்தது விஜய்யின் கத்தி படம் தான். லைகாவுக்கு மாஸ் ஓபனிங் கொடுத்த படம் கத்தி. இதன் காரணமாகவே ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை நாங்கள் தான் தயாரிப்போம் என மிக உறுதியாக இருந்து படத்தை தயாரித்து வருகிறது லைகா. இது மட்டும் இல்லாமல், திரைப்படத் தயாரிப்பில் லைகாவுக்கு இதுதான் கடைசி படம் எனவும் கூறப்படுகிறது.

Vijay Son Jasan Sanjay Debut Movie Title Will Announce August 15th
Photo Credit:

டைட்டில்: ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக இடைவெளி விட்டுவிட்டு படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டிலை வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் என்பதால் ஒரு நல்ல நாளில் படத்தின் டைட்டிலை அறிவிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 25 விஜய்யின் திருமண நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X