அச்சு அசல் தளபதியேதான்.. சேலத்தில் மாஸ் எண்ட்ரி கொடுத்த விஜய் மகன்.. கூட யார் இருக்கா பாருங்க!

சேலம்: நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் களமிறங்க எல்லா வேலைகளையும் செய்து வருகிறார். இந்த நேரத்தில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும்போது, விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சென்னையில் இருந்து சேலத்திற்கு விமானத்தில் வந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் விஜய் தற்போது தனது 69 வது படத்தில் நடித்து வருகிறார். கே.வி. என் புரெடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜன நாயகன் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். படம் இந்த ஆண்டு அக்டோபருக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. தற்போது படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாக ஒரு பேச்சும் உள்ளது.

Vijay Jason Sanjay Vijay Son

இப்படியான நிலையில் தனது கட்சி வேலைகளையும் விஜய் கவனித்து வருகிறார். விஜய் சினிமாவில் இருந்து விலகுவதால், ரசிகர்கள் வருத்தம் அடைந்தாலும், விஜய்யின் மகன் தமிழ் சினிமாவில் இயக்குநராக கால் பதிக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் முன்பே தொடங்கியிருந்தது. லைகா தயாரிக்க முன் வந்து படத்தை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். படத்தில் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி சில நாட்கள் நடைபெற்றதாகக் கூட தகவல்கள் வெளியானது.

அஜித்: ஏற்கனவே விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படம் இயக்குகிறார் என்ற தகவலைத் தெரிந்து கொண்ட பின்னர், அஜித், ஜேசன் சஞ்சய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் , லைகா ஏதாவது குளறுபடி செய்தால், அல்லது ஒத்துவரவில்லை எனத் தெரிந்தால், உடனே சொல்லச் சொல்லியும் உள்ளார். அதற்கு காரணம், தானே நேரடியாக சில தயாரிப்பாளர்களிடம் பேசுவதாகவும் கூறியதாக ஒரு பேச்சு உலா வந்தது.

விஜய் மகன்: இந்நிலையில் விஜய் மகன், ஜேசன் சஞ்சய் இன்று அதாவது பிப்ரவரி 25ஆம் தேதி சேலத்திற்கு வந்துள்ளார். பாமகவின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி. இவரது இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ஜேசன் சஞ்சய் வந்துள்ளார். பொதுவாகவே இதற்கு முன்னர் எந்த வெளி நிகழ்ச்சிகளும் கலந்து கொள்ளாத விஜய்யின் மகன் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி இல்லத் திருமண விழாவிற்கு வருகை தந்துள்ளதால் இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய் சேதுபதி: மேலும் அவர் சென்னையில் இருந்து சேலத்திற்கு வந்த விமானத்தில்தான், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் வந்துள்ளனர். இவர்களை விமான நிலையத்தில் வரவேற்க தொண்டர்களும் ரசிகர்களும் கூடியிருந்தனர். விஜய்க்கு பதிலாக விஜய் மகன் கலந்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. விஜய் மகனைப் பார்த்த பலர் முதலில் விஜய் தான் என நினைத்து உள்ளார்கள். பார்ப்பதற்கு அச்சு அசல் விஜய் போலவே இருந்ததால், ரசிகர்கள் பலரும் விஜய் தான் என நினைத்தார்கள். அதன் பின்னர்தான் அது விஜய் இல்லை, விஜய் மகன் என தெரியவந்துள்ளது. மேலும், விஜய் சேதுபதியைப் பார்த்த ரசிகர்கள், அவருடன் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டியதால், விஜய் சேதுபதி அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X