புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா.. அப்பா விஜய் போலவே ஆட்டம் போட்ட ஜேசன் சஞ்சய்.. சிக்மா ஸ்டைல்!

சென்னை: நடிகரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ள சிக்மா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வீடியோ வரும் ஜூன் 4ம் தேதி வெளியாகவுள்ளது என்கிற அறிவிப்பை ஒரு சின்ன புரோமோ வீடியோவுடன் தற்போது ஜேசன் சஞ்சய் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஒரு பக்கம் விஜய்யின் திருச்சி பேச்சு டிரெண்டாகி வரும் நிலையில், இன்னொரு பக்கம் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தனது படத்தின் பாடல் காட்சியை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

Vijay Son Jason Sanjay dance for his Sigma Movie Sigma Style Song promo out now

இதில், ஹைலைட் என்னவென்றால் சிக்மா பட பாடலில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லாவுடன் இணைந்து ஜேசன் சஞ்சய்யும் நடனமாடியுள்ளார்.

அப்பாவுடன் முதல் நடனம்: "நான் அடிச்சா தாங்கமாட்ட" என வேட்டைக்காரன் படத்தின் பாடலுக்கு அப்பா விஜய்யுடன் குழந்தை ஜேசன் சஞ்சய் நடனமாடியதை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் பார்த்து ரசித்து அப்போதே ஜேசன் சஞ்சயை பலரும் கொஞ்சி கொண்டாடினர். இந்நிலையில், பல வருடங்கள் கழித்து தனது இயக்கத்தில் உருவாகும் சிக்மா படத்திலும் ஜேசன் சஞ்சய் டான்ஸ் ஆடியுள்ளார்.

சிக்மா ஸ்டைல்: வரும் ஜூலை 31ம் தேதி சிக்மா திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அதன் புரமோஷன் பணிகளை ஜேசன் சஞ்சய் ஆரம்பித்துள்ளார். லைகா தயாரிப்பில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, கேத்தரின் தெரசா, ராஜு சுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள சிக்மா படத்தின் முதல் சிங்கிளான சிக்மா ஸ்டைல் பாடலுக்கு ஜேசன் சஞ்சய் நடனமாடிய சிறிய க்ளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

சீக்கிரமே ஹீரோவாகிடுங்க: விஜய் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியுள்ள நிலையில், ஜேசன் சஞ்சய் டைரக்‌ஷனை தாண்டி அபிஷன் ஜீவிந்த், பிரதீப் ரங்கநாதன், கென் கருணாஸ் போல ஹீரோவாகவும் ஆக வேண்டும் என ரசிகர்கள் ஜேசன் சஞ்சய் டான்ஸ் ஆடும் அந்த சின்ன க்ளிப்பை பார்த்தே சொல்ல ஆரம்பித்துவிட்டனர். முதல் படத்தை இயக்கி முடித்து விட்டு அடுத்து ஹீரோவாகும் ஐடியாவும் ஜேசன் சஞ்சய்க்கு இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். சந்தீப் கிஷனை விட ஜேசன் சஞ்சய் சூப்பர் என்றும் தளபதி ரசிகர்கள் கமெண்ட் போட ஆரம்பித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X