Vijay son: ஜேசன் சஞ்சய் படத்தில் நடிக்கப் போகும் இளம் ஹீரோ இவர் தானா? பரபரக்கும் கோலிவுட்!
சென்னை: அப்பா விஜய் உதவி இல்லாமலே கோலிவுட்டில் அம்மாவின் முயற்சியால் இயக்குனராக போகிறார் ஜேசன் சஞ்சய் என ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது ஒரு பக்கம் இருக்க நடிகர் விஜய் லைகா தயாரிப்பில் அடுத்தடுத்து இரு படங்களில் நடிக்க உள்ள நிலையில் தான் லைகா விஜய் மகனை இயக்குநராக அறிமுகம் செய்கிறது என்றும் பின்னாடி இருந்து மகனை இயக்கி வருகிறார் விஜய் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
இதில், எது உண்மை? எது பொய்? என்பதை ஜேசன் சஞ்சய் வாய் திறந்து கூறினால் தான் தெரியவரும் என்பது தான் நிதர்சனம். இயக்குனராக லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் படம் இயக்க உள்ள நிலையில், விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்றும் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்றும் ஏகப்பட்ட நடிகர்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

இந்நிலையில், அதெல்லாம் இல்லைங்கோ என இளம் நடிகர்கள் மூன்று பேர் பெயர் தற்போது புதிதாக உருட்டப்பட்டு வருகிறது.
அப்பாவுக்கும் மகனுக்கும் பிரச்சனையா: இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் நடிகர் விஜய்க்கும் பிரச்சனை உருவான நிலையில், கிளம்பிய பஞ்சாயத்து தற்போது அப்பாவுக்கும் மகனுக்கும் பிரச்சனையா என விஜய் மற்றும் ஜேசன் சஞ்சய் இடையேயும் தீப்பற்றி எரிகிறது.
அதற்கு காரணம் ஜேசன் சஞ்சய் தனியாளாக லைகா நிறுவனத்தில் இயக்குனராக அறிமுகம் ஆவப்போவதாக வெளியான அறிவிப்பு மற்றும் அவரது மேனேஜராஜ அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா நியமிக்கப்பட்டு இருப்பது தான் என்கின்றனர்.
மெனக்கெட்ட அம்மா: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சுரேஷ் சந்திரா தான் மேனேஜர் என்றும் மாவீரன் படத்தை தியேட்டரில் வந்து சங்கீதா பார்ப்பதற்கு காரணமே அது தான் என்றும் ஏகப்பட்ட பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
லண்டனில் சங்கீதாவின் அப்பா தொழிலதிபராக உள்ள நிலையில், லண்டனில் உள்ள சுபாஸ்கரனை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையால் தான் ஜேசன் சஞ்சய் லைகா தயாரிப்பில் படம் இயக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.
அதர்வா, ஹரிஷ் கல்யாண், கவின்: விஜய்சேதுபதி, ஜீவா, துருவ் விக்ரம் உள்ளிட்ட பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், தற்போது பழைய பேஷன்ட்டுகளை டிஸ்சார்ஜ் செய்து விட்டு இளம் நடிகர்களான அதர்வா, ஹரிஷ் கல்யாண் மற்றும் கவின் இந்த மூவரில் ஒருவரை சஞ்சய் இயக்குவார் என புதிய அப்டேட்கள் கசிந்துள்ளன.
நடிகர் கவின் இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடிக்க உள்ள நிலையில், தோனி படத்தை முடித்துள்ள ஹரிஷ் கல்யாண் அல்லது அதர்வா நடிப்பதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். விரைவில் லைகா நிறுவனமே ஹீரோ யார் என்பதையும் அறிவித்து விடும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











