என்ன இது விஜய் மகனுக்கு வந்த சோதனை?.. என்ன செய்யப்போறாரோ?.. தேறிடுவாரா?

சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் அறிவிப்பு வெளியானதோடு சரி அதற்கு படம் பற்றிய எந்தத் தகவலும் இல்லை; எந்த மூவ்மெண்ட்டும் இல்லை. இதனால் அந்தப் படம் என்ன ஆனது என்பது குறித்து ரசிகர்களுக்கு கேள்வி எழுந்தது. சூழல் இப்படி இருக்க ஜேசன் சஞ்சய்யின் முதல் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோலிவுட்டின் டாப் நடிகர் விஜய் இப்போது GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 69ஆவது படமாக உருவாகும் அதுதான் தனது கடைசி படமாக இருக்கும் என்றும் அவர் அறிவித்துவிட்டார். அந்தப் படத்தை முடித்துவிட்டு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

Vijay Jason Sanjay GOAT

விஜய்யின் வாரிசு: விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்குவது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்திருக்கிறது என்பதுதான் உண்மை. இருந்தாலும் அவர்களுக்கு ஒரு ஆறுதலாக இருப்பது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவுக்கு வந்திருப்பதுதான். ஆனால் தனது தந்தை போல் நடிகராக இல்லாமல் தாத்தா போல் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படித்திருக்கும் ஜேசன் ஏற்கனவே ஒரு குறும்படத்தை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜேசன் என்ட்ரி: ஜேசன் சஞ்சய்க்கு 21 வயதுதான் ஆகிறது. இந்த வயதில் அவர் படம் இயக்க வருவது பலரிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. அதிலும் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகாவின் பேனரில் அவர் தனது முதல் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டு; அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பு வெளியானது. இதற்கிடையே ஜேசன் சஞ்சய் இந்த வயதிலேயே சினிமா இயக்குவது விஜய்க்கு பிடிக்கவில்லை என்றும்; அதனால்தான் இந்த விஷயத்தில் அவர் மௌனம் காத்துவருகிறார் என்றும் கிசுகிசு ஓடியது கவனிக்கத்தக்கது.

கவினுடன் பேச்சுவார்த்தை: ஜேசன் சஞ்சய் இயக்கப்போகிறார் என்றதும் யார் ஹீரோ என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. முதலில் விஜய் சேதுபதி, விக்ரம் மகன் துருவ் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. ஆனால் இப்போது ரைசிங் ஸ்டாராக இருக்கும் கவினிடம் படம் பற்றிய பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அதனை அவரே ஒரு பேட்டியிலும் சொல்லியிருந்தார். ஆனால் அது பேச்சுவார்த்தையோடு நின்று போனது. இதற்கிடையே ஜேசனின் இயக்கத்தில் நடிக்க நடிகர்கள் தயங்குவதாகவும் ஒரு தகவல் வட்டமடித்தது.

படம் ட்ராப்?: இந்நிலையில் ஜேசன் சஞ்சய்யின் முதல் படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி லைகா நிறுவனத்தில் இப்போது சில பிரச்னைகள் ஓடிக்கொண்டிருப்பதாகவும்; அதன் காரணமாக ஜேசனின் படத்தை தயாரிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் படம் ட்ராப் ஆகிவிட்டதோ என்று கவலையில் இருந்த ஜேசனுக்கு விஜய்யின் அட்மின் ஜெகதீஷ் கை கொடுத்திருக்கிறாராம். அதாவது இந்தப் படத்தை ஜெகதீஷே தயாரிக்கவிருப்பதாக ஒரு பேச்சு எழுந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X