Vijay Son: மனைவி வொர்த் இல்லனு சொன்ன விஜய்.. வொர்த்தான வேலையை செய்த ஜேசன் சஞ்சய்!
சென்னை: விஜய்யின் மனைவி சங்கீதா செப்டம்பர் 27ந் தேதி தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கணவருக்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். இது இணையத்தில் மிகப்பெரிய அளவில் புயலை கிளப்பியது. இதையடுத்து, விஜய், திரிஷா இருவரும் ஏஜிஎஸ் தயாரிப்பாளரின் மகன் திருமணத்தில் ஜோடியாக கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
விஜய், சங்கீதா: மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில் விஜய், திரிஷாவுடன் வந்தது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து மகாபலிபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய விஜய், இப்போது நடந்து வரும் பிரச்சனையை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் அது குறித்து கவலைப்பட வேண்டாம். அந்த அளவுக்கு அது வொர்த் இல்லை எனக் கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு தவெக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் உட்பட பலரும் 25 ஆண்டுகாலம் வாழ்ந்த மனைவி வொர்த் இல்லையா என கேட்டு விஜயின் பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

வொர்த்தான மகன்: இந்நிலையில், தற்போது, விஜயின் மகன் ஜேசப் சஞ்சயின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போட்டோவில் ஈரோட்டில் ஃபேக்டரி தொழிலாளர்களுடன் சஞ்சய் போட்டோ எடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும், விஜய் தனது மனைவியை 'வொர்த்' இல்லை என்று சொன்னார். ஆனால், மகன் 'வொர்த்' என்பதை நிரூபித்து விட்டார் என கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இயக்குநராக அறிமுகமாக இருக்கும் ஜேசப் சஞ்சய் 'சிக்மா' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனமும், ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்து வருகிறார். தமன் இசையமைத்து வரும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது


Click it and Unblock the Notifications











