ஜன நாயகனை ஓரம் போகச் சொல்லிடலாமா? விஜய் மகன் தான் இனி டாக் ஆப் தி டவுன்.. ரொம்ப வேகமா இருக்காரே
சென்னை: நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் நடிகராக களமிறங்குவார் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தபோது, எனக்கு எனது அப்பா மாதிரி நடிக்க எல்லாம் ஆர்வம் இல்லை, தாத்தா மாதிரி இயக்குவதில் தான் ஆர்வம் அதிகம் என்று, இயக்குநர் அவதாரம் எடுக்க முறையான படிப்புகளை எல்லாம் மேற்கொண்டார். இவரது முதல் படமாக உருவாகி உள்ள சிக்மா படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றும் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி இதுதான் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் இருந்து கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக விலகி விட்டாலும், லைகா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து பிரமாண்டமான வெற்றி தொடக்கத்தை கொடுத்தவர் விஜய். இவரது கத்தி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்திருந்தது லைகா. இதனால் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை நாங்கள் தான் தயாரிப்போம் என்று உரிமையுடன் ஒப்பந்தம் போட்டது லைகா.

சிக்மா அப்டேட்: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்க, லைகா தயாரிக்க, சந்தீப் கிஷான் கதாநாயகனாக நடிக்க உருவாகி உள்ள படம் தான் சிக்மா. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், இயக்குநர் அவதாரம் பூண்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும், படத்தின் டீசர் வரும் 23ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்றும் படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
எதிர்பார்ப்பு: மேலும் பலர் அப்பாவின் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி மலேசியாவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இப்படி இருக்கும்போது ஜேசன் சஞ்சய் தனது படத்தின் டீசரை வரும் 23ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதால், திரைதுறையில் பலரும் தற்போது அப்பா விஜய் மற்றும் மகன் ஜேசன் சஞ்சய் குறித்து தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் சில இணையவாசிகள், என்னப்பா ஜன நாயகனை ஓரம் போகச் சொல்லி விடலாமா? என்று எல்லாம் கிண்டலாக கேட்டு வருகிறார்கள். அதேபோல் சிக்மா படத்தின் டீசர் ஜன நாயகன் படம் திரையிடப்படும் தியேட்டர்களில் ஒளிபரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications











